கழுத்து கருமை நீங்க இதை மட்டும் 15 நிமிடம் தடவுங்க!

Photo of author

By Selvarani

கழுத்து கருமை நீங்க இதை மட்டும் 15 நிமிடம் தடவுங்க!

முகம் அழகாகவும், பொலிவுடன் வெள்ளையாக இருக்கும் ஆனால் அவர்களின் கழுத்துப் பகுதி மிகவும் கருமையாக இருக்கும். கழுத்தில் ஏற்படும் கருமையை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம்.

வாசனை திரவியங்கள் உடலில் பருவதாலும், ஹேர் டை சார்ந்த பல திரவியங்களின் ஒவ்வாமை, கர்ப்ப காலங்களில் ஹார்மோன் மாற்றங்கள், அலர்ஜி, சரியான பராமரிப்பு இல்லாதது போன்ற பல காரணங்களினால் கழுத்துப் பகுதி கருமையாகும். இதனை சரி செய்ய நாம் பயன்படுத்த வேண்டியது.

தேவையான பொருட்கள்:

• தக்காளி
• சோள மாவு
• பச்சைப்பயிறு
• கற்றாழை
• உருளைக்கிழங்கு
• நாட்டு சக்கரை

பயன்படுத்தும் முறை:

1. தக்காளி சாறு மற்றும் சோள மாவு இரண்டையும் ஒன்றாக கலந்து கழுத்தில் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருகையில் விரைவில் கருமை மறைந்துவிடும்.

2. பச்சை பயிறு இயற்கையாகவே நம் முகத்தை அழகு ஊட்டக்கூடிய ஒரு அற்புதமான தன்மை கொண்டது. ஆகையால் ஒரு டீஸ்பூன் பச்சைப்பயிறு பொடி, பால் ஒரு ஸ்பூன், நாட்டுச் சர்க்கரை தேவையான அளவு எடுத்து ஒரு கலவையாக கலந்து கொண்டு கழுத்துப் பகுதிகளில் தடவி வருகையில் விரைவில் கருமை குறைந்து விடும்.

4. சாறு நிறைந்த ஒரு உருளைக்கிழங்கை எடுத்து இரண்டாக வெட்டி கழுத்துப் பகுதிகளில் மிருதுவாக தேய்க்கவும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்கையில் கழுத்துப் பகுதியில் கருமை நீங்கிவிடும்.

5. இரவு நேரங்களில் கற்றாழை ஜெல்லை எடுத்து கழுத்து பகுதிகளில் 15 நிமிடம் மசாஜ் செய்த பிறகு அப்படியே தூங்கி விட வேண்டும். காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவி வரலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வருகையில் கழுத்து கருமை அகன்று விடும்.

இதனை தொடர்ந்து செய்து வருகையில் இறந்த செல்களை புதுப்பிக்கும். மீண்டும் கழுத்து பொலிவுடன் காணப்படும்.