சட்டசபையில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பை செயல்படுத்திய மாநில அரசு!

0
125

சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது பள்ளப்பட்டி, திட்டக்குடி, மாங்காடு, குன்றத்தூர், நந்திவரம், கூடுவாஞ்சேரி ,பொன்னேரி, திருநின்றவூர், சோளிங்கர், இடங்கணசாலை, தாரமங்கலம், திருமுருகன்பூண்டி, கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, மதுக்கரை, வடலூர், கோட்டகுப்பம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, அதிராம்பட்டினம், மானாமதுரை, சுரண்டை, களக்காடு, திருச்செந்தூர், கொல்லங்கோடு முசிறி, லால்குடி, உள்ளிட்ட பேரூராட்சிகள், அதன் அருகே வளர்ச்சி அடைந்திருக்கின்றன ஊராட்சிகளை ஒன்றிணைத்து நகராட்சிகள் ஆக மாற்றப்படும் என்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு அறிவித்தார்.

இதனையடுத்து இந்த பேரூராட்சிகள் நகராட்சிகள் ஆக தரம் உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது. புதிதாக அறிவிக்கப்பட்ட 32 நகராட்சிகளுக்கு ஆணையர்கள் உள்ளிட்டவர்களை நியமனம் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனரகம் ஆணை பிறப்பித்திருக்கிறது.

Previous articleஅதிமுகவின் தகுதி முறையை விமர்சனம் செய்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் இன்று அதே முறையை பின்பற்றுகிறார்; எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!
Next articleதிடீரென்று உள்வாங்கிய கடல்! பீதியான சுற்றுலாபயணிகள்!