எந்த காலத்திலுமே மின்வாரியம் தனியார்மயம் ஆகாது என்று தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்திருக்கின்றார் தொழிற்சங்கத்தினர் உடனடியாக வழக்கை திரும்பப் பெற்றால் பத்தாயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்குவதற்கு அரசு தயாராக இருக்கின்றது என்று தெரிவித்திருக்கின்றார்.
சென்னையில் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, அவர் தெரிவித்ததாவது, மின்சார வாரியம் தனியார்மயமாக்கபட இருப்பதாக அரசாணை வழங்கப்பட்டிருக்கின்றது. அதன் காரணமாக தனியார் மயமாக்க இருக்கின்றது. இந்த தகவல் வெளியான நேரத்தில் அன்றே அதை மறுக்கும் விதமாக மின்சார வாரியம் எந்த சூழ்நிலையிலும் தனியார்மயம் ஆகாது வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுப்போமே ஒழிய எந்த காலத்திலும் தனியார் மயம் ஆகாது என்று தெரிவித்திருந்தேன். மத்திய அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தபோது கூட முதல்வர் உடனடியாக மத்திய அரசுக்கு இது சரிவராது என்று கடிதம் எழுதி இருக்கின்றார். நாங்கள் தொடர்ச்சியாக மின்சாரவாரியம் அரசுத்துறை யாகத்தான் இருக்கும் தனியார் மயம் ஆகாது என்று உறுதியாக தெரிவித்து, பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் கூட போராட்டம் நடத்த ஊழியர்கள் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கிறார்கள்.
அவர்கள் என்னதான் நினைத்திருக்கிறார்கள் என்று எங்களுக்கு புரியவில்லை. இந்த அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முன்னெடுக்கும் முயற்சியா என்றும் தெரியவில்லை. தனியார் மயம் ஆகாது என நாங்கள் உறுதிபட தெரிவித்து பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு மறுப்பது சந்தேகத்தை உண்டாக்கி இருக்கின்றது ஆனாலும்கூட அன்றைய தினம் அனுப்பிய ஆணை திரும்பப் பெறப்படுகிறது நான் முன்னரே சொன்னது போல ஐம்பது சதவீத பணியாளர்கள் குறைவாக இருக்கின்ற பகுதியிலே அங்கே தொய்வின்றி வேலைகள் தொடர தடை இல்லா மின்சாரம் வழங்க அந்த பகுதியில் இருப்பவர்கள் பயன்படுத்த படுவார்கள் என்று ஆணை வெளியிடப்பட்டது. அதனை அவர்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். தனியார் மயமாக்கப்படும் என நினைத்து போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஆணையை ரத்து செய்கிறோம் என்று அறிவிக்க நினைத்தேன். ஆனால் அவர்கள் வர மறுத்து விட்டார்கள் ஆனாலும் பரவாயில்லை மக்களுக்கு உண்மையை அறிவதற்காக அந்த ஆணையை திரும்ப பெற்றிருக்கின்றோம் என்று தெரிவித்தார்.
எந்த காலத்திலும் மின்சார வாரியம் தனியார் மயம் ஆகாது கேங்மேன் பணிக்கு 5 ஆயிரம் நபர்களை எடுப்பதாக தெரிவித்திருந்தோம். காலிப்பணியிடங்கள் அதிகமாக இருக்கும் காரணத்தால், முதலமைச்சர் 10,000 பேரை எடுக்க தெரிவித்ததன் அடிப்படையில், ஆணையைப் பிறப்பித்து இருக்கின்றோம் தொழிற் சங்கத்தை சார்ந்தவர்கள் தடை வாங்குவதற்காக உயர்நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள். அவர்களிடம் வேலை செய்த நபர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்ற காரணத்திற்காக உயர்நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள் அவர்கள் வழக்கை திரும்பப் பெற்றால் அடுத்த நிமிடமே இந்த வாரத்திலேயே 10,000 பேருக்கு பணி வழங்குவதற்கு அரசு தயாராக இருக்கின்றது என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.