கடந்த 2014ஆம் வருடம் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மத்தியில் அமைந்ததிலிருந்து நாட்டை முன்னேற்றுவதற்கு பல்வேறு புதிய திட்டங்களை அவர் அறிமுகம் செய்து வருகிறார்.
அது இல்ல சில குறிப்பிடத் தக்க திட்டங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளனர். அதிலும் தூய்மை இந்தியா திட்டம், மேக் இன் இந்தியா திட்டம், டீம் இந்தியா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
அதோடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் தொகுதிகளில் ஏதாவது ஒரு ஊரை தத்தெடுத்துக் கொண்டு அந்த கிராமத்தை முன்னேற்றுவதற்காக பாடுபட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில், சிவகங்கை இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் பணி நியமன ஆணை வழங்கும் விழா நேற்று நடந்தது. இந்த மையத்தில் மத்திய அரசு பணியில் இணைய 258 பேருக்கு பணி நியமன ஆணையை மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.
டி ஐ ஜி ஆச்சல் சர்மா தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி, மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவின் போது அவர் பேசியதாவது நாட்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசு துறைகளில் வேலை வழங்க பிரதமர் நரேந்திர மோடி உத்திரவாதம் வழங்கியதன் அடிப்படையில் முதல் கட்டமாக எல்லை பாதுகாப்பு படை, தேசிய வங்கிகள் உள்ளிட்ட துறைகளில் ஒரே நாளில் 71 ஆயிரம் பேருக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி.
சிவகங்கை இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் 258 பேர் பணி நியமன ஆணையை பெற்றனர். வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஒருங்கிணைந்த தொழில் பயிற்சி பெற கர்மயோகி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்தார்.
முத்ரா வங்கி கடன் மூலமாக இளைஞர்கள் சிறு தொழில் ஆரம்பித்திருக்கிறார்கள். தெருவோர வியாபாரிகளுக்கும் கடனுதவி தருகின்றோம் என தெரிவித்தார். மேலும் இளைஞர்கள் சுய தொழில் ஆரம்பிக்கும் நோக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக 32 முதல் 35 துறைகளில் சுய வேலைவாய்ப்பு பயிற்சி தரப்படுகிறது. மேக் இன் இந்தியா திட்டம் மூலமாக நாடு பொருளாதார வளர்ச்சியை அடைகிறது என்று அவர் பேசியுள்ளார்.
பயிற்சி மைய கமாண்டர் சுரேஷ்குமார் யாதவ் நன்றி தெரிவித்தார். அதன் பிறகு சிவகங்கை வேலு நாச்சியார் மணிமண்டபத்தை அமைச்சர் பார்வையிட்டார்.
சிவகங்கையில் மத்திய அரசின் சாலையோர வியாபாரிகள் வளர்ச்சித் திட்டத்தில் வழங்கிய தள்ளுவண்டி கடைகளை பார்வையிட்ட அமைச்சர், இவை நகராட்சியின் மூலமாக இலவசமாக தானே வழங்கப்பட்டது? இதற்காக அதிகாரிகளுக்கு பணம் எதுவும் கொடுத்தீர்களா? என்று கடைக்காரர்களிடம் விசாரித்தார்.
சமீபத்தில் தமிழகத்தின் பக்கம் பிரதமரின் பார்வை திரும்பி இருக்கிறது. அதற்கு அச்சாரமாக தான் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை இன்னும் இரண்டு மாதங்களில் 20க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் முகாமிடுவார்கள் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களிடம் சரியாக சென்று சேர்கிறதா? என்பதை கண்காணிப்பதற்காக பல்வேறு மத்திய அமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி நியமனம் செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

