தமிழகம், புதுவை, மேற்கு வங்காளம், கேரளா மற்றும் அசாம் போன்ற ஐந்து மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.இந்த 5 மாநிலங்களில் தமிழ்நாடு, கேரளா, புதுவை, ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து கேரளா மாநிலம் முழுவதிலும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் போன்ற எல்லா நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்படுவதாக கேரள மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது.
இதுகுறித்து அந்த மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், சட்டசபைத் தேர்தல் நடைபெறும்போது தேர்தல் நாளான ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் பள்ளி கல்லூரிகள் போன்றவற்றிற்கு விடுமுறை அறிவிக்கப் படுகிறது என்று.அதுபோல வணிக நிறுவனங்களில் வேலை பார்த்துவரும் தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை கொடுக்கவேண்டும்.
மாவட்டத்திற்கு வெளியே வேலை பார்த்துவரும் வெளிமாநில தொழிலாளர்களுக்கும் தினக்கூலி தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை கொடுக்க வேண்டும். தனியார் நிறுவன ஊழியர்கள் எல்லோருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை கொடுக்கப்படுகிறதா என்பதனை தொழிலாளர் நல சங்க அதிகாரிகள் நேரடியாக கவனித்து அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.