கும்பம் – இன்றைய ராசிபலன்!!கவனமாக இருக்க வேண்டிய நாள்!

0
137
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!

கும்பம் – இன்றைய ராசிபலன்!!கவனமாக இருக்க வேண்டிய நாள்!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள். ராசிக்குள்ளேயே சந்திர பகவான் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நிதி வருவதற்கு காலதாமதம் ஆகும். கணவன் மனைவி அமைதியாக இருப்பது சிறப்பு. குடும்ப உறுப்பினர்கள் மீது தேவையற்ற விவாதம் வேண்டாம்.

உத்தியோகத்தில் வீண் அலைச்சல் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில காரியங்கள் இழுபறி ஆகலாம்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில பிரச்சனைகள் எல்லாம் என்பதால் கூடுமானவரை அனுசரித்து செல்வது அவசியம்.

அரசியல்வாதிகள் அமைதியாக காணப்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல் எடுக்கும் மருந்துகளை சரிவர எடுத்துக் கொள்வது அவசியம்.

இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமகரம் ராசி – இன்றைய ராசிபலன்!!உற்றார் உறவினர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும் நாள்!
Next articleமீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்!