கும்பம் – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

0
239
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!

கும்பம் – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

கும்பராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். களஸ்திர ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் சந்தோஷமாக காணப்படுவீர்கள். குடும்ப உறவு அதி அற்புதமான உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பாக உள்ளது.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு உண்டான வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். சிலருக்கு கேட்டிருந்த கடன் உதவிகள் இன்று கைக்கு வந்து சேர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் விருந்து மற்றும் கேள்விகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம் ஒன்று கண்டிப்பாக வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து சேரும் நாள்!
Next articleமீனம் ராசி – இன்றைய ராசிபலன்!!  உங்களுக்கு ஆற்றலுடன் செயல்படும் நாள்!