கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!!

0
194

கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் திருநாளாக இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் உங்களுக்கு போட்டி போட்டுக் கொண்டு நன்மைகள் செய்து மகிழ்வார்கள்.
வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை கூடும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக செல்லும். உடல் ஆரோக்கியம் சீராகவும் சிறப்பாகவும் இருக்கும்.
மாணவ மாணவிகள் கல்வியில் தைரியமாக காணப்படுவார்கள். அரசியல்வாதிகள் மேடைப் பேச்சுகளில் ஜொலிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் கவனமாக செயல்படுவார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். காதலர்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள்.
உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வேலை பளு குறையலாம். கொடுமை நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உடன்பிறப்புகளின் வருகையால் மகிழ்ச்சியாக காணப்படுவார். மூத்த வயதை சேர்ந்தவர்களுக்கு தைரியம் அதிகரிக்கும்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleஉடல் எடை குறைய சீரகத்தை எவ்வாறு பயன்படுத்துவது?
Next articleமீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு வந்து சேரும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here