கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கவனமாக செயல்பட வேண்டிய நாள்!!

0
91
#image_title

கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கவனமாக செயல்பட வேண்டிய நாள்!!

கும்பராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கவனமாக செயல்பட வேண்டிய நாள். ஏற்கனவே உங்கள் ராசியில் சனி பகவான் இருப்பதால் அதே நேரம் சந்திர பகவானும் இருக்கும் நிலையில் குழப்ப நிலை தோன்றும். ஆகையால் எந்த ஒரு விஷயத்திலும் நிதானமாகவும் கவனமாகவும் செயல்பட வேண்டும். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியை ஒற்றுமை குறையும் என்பதால் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.

வருமானம் நீங்கள் எதிர் பார்த்தபடி வந்து சேராது. உத்தியோகத்தில் வீண் மன குழப்பம் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில இலுப்பரியான செயல்கள் நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதி காப்பது நல்லது. கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒரு வித குழப்பம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு வேலையிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள். மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு வேலையிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்ணிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

 

author avatar
Selvarani