கும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு முயற்சி செய்ய வேண்டிய நாள்!!

0
276
#image_title

கும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு முயற்சி செய்ய வேண்டிய நாள்!!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனிபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அமைதியுடன் முயற்சி செய்ய வேண்டிய நாள். சந்திர பகவான் உங்கள் ராசியிலேயே இருப்பதால் சில பிரச்சனைகளை கொடுப்பார் ஆகையால் எந்த ஒரு வேலையும் அமைதியாக யோசித்து செயல்பட வேண்டும். கணவன் மனைவியுடைய சிறு சிறு ஊடல்கள் வரலாம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களும் இடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் வேலை பளு தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில பிரச்சனைகள் எழலாம். அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதி காப்பது நல்லது. கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் குடிகொள்ளும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழப்பத்துடன் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை நாடுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு முயற்சியிலும் கவனமாக இருப்பது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வருமானம் இரட்டிப்பாகும் நாள்!!
Next articleமீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here