TVK: தமிழக அரசியலில் எதிர்பாராத மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியிலிருந்து அடுத்ததாக யார் வெளியேறப் போகிறார்கள் என்பது தற்போது பெரிய கேள்வியாக மாறியுள்ளது.
ஏற்கனவே டி.டி.வி தினகரன் த.வெ.க உடன் சேர அதிக வாய்ப்புள்ள நிலையில், பாரதம் கட்சியின் தலைவர் பூவை. ஜெகன் மூர்த்தி சமீபத்தில் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருப்பதும், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என கூறியிருப்பதும் புதிய அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
இவரின் இந்த கருத்து இவர் அ.தி.மு.க கூட்டணியில் நீடிப்பாரா? இல்லையா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் வருகை இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அ.தி.மு.க கூட்டணியிலிருக்கும் சிறிய கட்சிகள் தங்களது அடையாளத்தை நிலைநிறுத்தும் முயற்சியில், அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகி த.வெ.க-வுக்கு தள்ளப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பூவை. ஜெகன் மூர்த்தியின் இந்தக் கருத்து, அ.தி.மு.க கூட்டணியில் நடக்கவுள்ள பிரிவுகளின் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. அடுத்த சில வாரங்களில் அ.தி.மு.க கூட்டணியில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த பூவை. ஜெகன் மூர்த்தியின் இந்த கருத்தும், அந்த மாற்றத்துக்கு அடித்தளமாக அமைகிறது.