மாணவர்களே ரெடியா? இன்று உங்கள் மதிப்பெண்கள்!

மாணவர்களே ரெடியா? இன்று உங்கள் மதிப்பெண்கள்!

பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் கொரோனாவின் காரணமாக மாணவர்களின் நலன் கருதி ரத்து செய்யப்பட்டது. அதன் காரணமாக மாணவ, மாணவியர்களுக்கான தேர்வு மதிப்பெண் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் 50 சதவிகிதமும், பிளஸ் 1 தேர்வில் 20 சதவிகிதமும், பிளஸ் 2 தேர்வில் 30 சதவிகிதமும் மதிப்பெண்கள் மதிப்பீடு அடிப்படையில் 30 சதவீதம் என மொத்தம் 100 சதவிகிதத்திற்கு கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதற்கான பணிகளில் தேர்வு துறையும், கல்வித்துறையும் ஈடுபட்டுள்ளன. மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டதாக கூறப்பட்டது. அதன்படி இன்று பிளஸ் டூ தேர்வு முடிவை வெளியிட இருப்பதாக அண்மையில் அரசு தேர்வு துறை அறிவித்தது.

அதற்கான இணையதள முகவரிகளையும் நேற்று முன்தினம் வெளியிட்டது. வழக்கமாக ஒவ்வொரு தேர்விலும் தேர்வு முடிவு முழு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வழங்கப்படும். ஆனால் இந்த முறை மட்டும் எஸ்எஸ்எல்சி பிளஸ் 1 மதிப்பெண்களை கணக்கிடும்போது தசம அடிப்படையில் என்ன மதிப்பெண்கள் வருகின்றதோ அதை அப்படியே மாணவர்களுக்கு வழங்க அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது ஒரு மாணவரின் மதிப்பெண் கணக்கிடும் போது ஆறு பாடப்பிரிவுகளில் 600 மதிப்பெண்ணுக்கு அந்த மாணவர் பெற்ற மொத்தக் கூட்டுத் தொகையாக மதிப்பெண் 520.76 என்று வந்தால் அந்த மதிப்பெண்ணை முழுமையாக்காமல்,  அப்படியே தசம அடிப்படையிலேயே தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத் துறை திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்ஜினியரிங் உட்பட சில உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையில் கட் ஆப் மதிப்பெண் முறை பின்பற்றப்பட்டு வருவது நடைமுறையில் உள்ளது. அதன் அடிப்படையிலேயே தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். இந்த நிலையில் புதிய நடைமுறை தசம எண் அடிப்படையில் வரும் மதிப்பெண்கள் கட்-ஆஃப் மதிப்பெண்ணைக் கணக்கிடும் போது எந்த ஒரு மாணவரும் பாதிப்படைய மாட்டார்கள் என்றும், எந்தவித குழப்பமும் இன்றி உயர்கல்வி மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு அடித்தளமாக இருக்கும் என்றும் கல்வித்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இன்று காலை 10.15 க்கு செய்தியாளர் சந்திப்பில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும், அதன் அதிகார பூர்வ இணையங்களில் மாணவர்கள் 11 மணிக்கு சென்று பார்க்கலாம் என்றும் பள்ளி கள்ளவி துறை வெளியிட்டு உள்ளது.

Leave a Comment