கண்களை சுற்றி கருவளையங்கள் இருக்கின்றதா? அதை மறையச் செய்ய 3 எளிமையான டிப்ஸ் இதோ! 

Photo of author

By Sakthi

கண்களை சுற்றி கருவளையங்கள் இருக்கின்றதா? அதை மறையச் செய்ய 3 எளிமையான டிப்ஸ் இதோ!
ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி கருவளையங்கள் ஏற்படுவது சாதாரணமான ஒன்று. குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் கண்களை சுற்றி கருவளையங்கள் ஏற்படும். இதற்கு காரணம் அதிக நேரம் செல்போன் போன்ற திரைக்கு முன்னால் அதிக நேரம் நாம் இருப்பது தான்.
மேலும் நம்முடைய உடலில் இன்சுலின் அளவு குறைவாக இருந்தாலும் கருவளையங்கள் ஏற்படும். மேலும் கண்களுக்கு அலர்ஜி ஏற்பட்டாலும் கருவளையங்கள் ஏற்படும். மேலும் சூரிய ஒளியில் அதிக நேரம் நாம் இருந்தால் கருவளையம் ஏற்படும். எனவே இந்த கருவளையத்தை மறையச் செய்ய மூன்று வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கருவளையங்களை மறையச் செய்யும் மூன்று மருத்தவ வழிமுறைகள்…
1. முதலில் தேங்காய் எண்ணெய்யை சிறிதளவு எடுத்துக் கொண்டு அதை கருவளையம் மீது தேய்க்க வேண்டும். பின்னர் மாசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கருவளையம் மறையும்.
2. கண்களில் உள்ள கருவளையங்கள் மறைய வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி அதை கண்களின் மீது வைக்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் ஓய்வு எடுத்தால் கருவளையங்கள் மறையத் தொடங்கும்.
3. கண்களில் ஏற்படும் கருவளையங்களை மறையச் செய்ய கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை கண்களில் கருவளையம் இருக்கும் இடத்தில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கருவளையம் மறையும்.
இந்த மூன்று முறைகளில் எதையாவது ஒன்றை தொடர்ந்து செய்ய வேண்டும். அவ்வாறு தொடர்ந்து செய்யும் பொழுது நம்முடைய கண்களில் உள்ள கருவளையங்கள் மறைய தொடங்கும்.