நான் செய்யாத பரிகாரமும் இல்லை செல்லாத கோவிலுமில்லை ஆனால் எனக்கு திருமணம் மட்டும் நடக்கவில்லை என கவலை கொள்பவர்களா நீங்கள்..? அப்பொழுது நீங்கள் ஒரு பரிகாரத்தினை செய்வதன் மூலம் ஐந்தே வாரத்தில் உங்கள் வீட்டில் கெட்டிமேல சத்தம் கேட்கக்கூடிய ஒரு அரிய வாய்ப்பினை அந்த பரிகாரம் ஏற்படுத்திக் கொடுக்கும். திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருமே இந்த பரிகாரத்தினை செய்யலாம்.
ஒரு சிலருக்கு ஜாதகத்தின் தோஷம் காரணமாகவும், ஏழ்மையின் காரணமாகவும், ஒரு சிலருக்கு என்ன காரணம் என்று தெரியாமல் கூட திருமணம் ஆகாமல் இருக்கலாம். அவ்வாறு இருப்பவர்கள் அம்பாளின் மீது முழு நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தினை தொடர்ந்து ஐந்து வாரங்கள் செய்வதன் மூலம் சிறந்த பலனை பெறலாம். ஆனால் பெண்களுக்கு என தனி பரிகாரமும், ஆண்களுக்கு என தனி பரிகாரமும் உண்டு.
திருமணம் ஆகாத பெண்கள் வியாழன் கிழமை அன்று மருதாணி இலைகளை பறித்துக் கொண்டு அதனை ஒரு செம்பினுள் தண்ணீரை ஊற்றி அதனுள் மருதாணி இலைகளை போட்டுவிட வேண்டும். இதனை வியாழன் கிழமை இரவு தயார் செய்து இந்த செம்பு தண்ணீரை வீட்டின் பூஜையறையில் வைத்து விட வேண்டும். இந்த பரிகாரத்தினை திருமணம் ஆகாத பெண்கள் செய்யலாம் அல்லது பெண்ணினுடைய அம்மா செய்யலாம்.
அடுத்த நாள் வெள்ளிக்கிழமை அன்று இந்த செம்பு தண்ணீரை வீட்டின் அருகில் உள்ள அம்பாள் கோவிலுக்கு சென்று அம்பாளுக்கு அந்தத் தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்ய சொல்ல வேண்டும். திருமணம் ஆகாத பெண்ணின் கையால் அந்த செம்பு தண்ணீரை கோவிலின் ஐயரிடம் கொடுக்க வேண்டும். கண்டிப்பாக திருமணம் ஆகாத பெண்ணை கோவிலுக்கு கூட்டி செல்ல வேண்டும், அதேசமயம் அந்தப் பெண்ணின் கையால் தான் அந்த செம்பு தண்ணீரை கோவிலுக்கு கொடுக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஐந்து வார வெள்ளிக்கிழமைகளில் இந்த அபிஷேகத்தினை செய்து வருவதன் மூலம் கண்டிப்பாக திருமணம் கைகூடிவரும்.
ஆனால் அந்த செம்பு தண்ணீரை கொண்டு அபிஷேகம் செய்ய முடியாது என அந்த கோவில் நிர்வாகத்தினர் கூறிவிட்டால், அதற்கு பதிலாக இரண்டு மண் அகல் விளக்கினை எடுத்துக்கொண்டு அதில் நல்லெண்ணையை ஊற்றி அந்த ஒவ்வொரு விளக்கிலும் இரண்டு மருதாணி இலைகளை போட்டு தீபம் ஏற்றி அம்பாளிடம் எனக்கு திருமணம் ஆக வேண்டும் என மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். திருமணம் ஆகாத பெண்தான் கண்டிப்பாக இந்த தீபத்தினை ஏற்றி தொடர்ந்து ஐந்து வாரம் வழிபாடு செய்ய வேண்டும்.
அதேபோன்று திருமணம் ஆகாத ஆண்கள் என்றால் விநாயகர் கோவிலுக்கு செல்ல வேண்டும். இரண்டு மண் அகல் விளக்கில் தேங்காய் எண்ணெயை ஊற்றி, ஒவ்வொரு விளக்கிலும் இரண்டு மருதாணி இலைகளை போட்டு தீபம் ஏற்றி விநாயகரிடம் எனக்கு திருமணம் ஆக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இதனை ஆண்கள் ஞாயிற்றுக்கிழமை அல்லது புதன்கிழமைகளில் தொடர்ந்து 5 வாரம் செய்து வந்தால் கண்டிப்பாக திருமணம் நடைபெறும்.