குழந்தைகளுக்கு எதிரான இந்த செயல்களா? தமிழ்நாடு முதல் 14 மாவட்டங்களில் சிபிஐ அதிரடி சோதனை!

Photo of author

By Hasini

குழந்தைகளுக்கு எதிரான இந்த செயல்களா? தமிழ்நாடு முதல் 14 மாவட்டங்களில் சிபிஐ அதிரடி சோதனை!

தற்போது நாடு முழுவதும் தற்போது குழந்தைகளுக்கான பாலியல் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதுவும் இந்த கொரோனா காலத்தில் குழந்தைகள் வீட்டில் இருந்த சமயத்தில் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் மூலமாக மட்டுமே இந்த சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதற்கிடையே தற்போது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்து மற்றும் வீடியோ பதிவிட்டது தொடர்பாக சிபிஐ கடந்த 14 ம் தேதி 23 வழக்குகளை பதிவு செய்துள்ளது. தனித்தனியே பதிவு செய்யப்பட்ட இந்த இருபத்தி மூன்று வழக்குகளில் மொத்தம் 83 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சிபிஐ இன்று அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகிறது. மொத்தம் 14 மாநிலங்களில் உள்ள எழுபத்தி ஆறு இடங்களில் இந்த சோதனை நடத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு, ஆந்திரா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், பீகார், ஒடிசா, ராஜஸ்தான், மராட்டியம், குஜராத், ஹரியானா, மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சோதனை நடத்தி வருவதாக சிபிஐ யின் செய்தித் தொடர்பாளர் ஆர்.சி. ஜோஷி தெரிவித்துள்ளார். இந்த சோதனையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அல்லது எதிர்பாராத தகவல்கள் வெளிவரும் என்றும் சிபிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.