பணத்தை அதிகம் செலவு செய்பவர்களா? அதிகம் செலவு செய்யாமல் சேமிக்க சில வழிகள் இதோ!!

Photo of author

By Sakthi

பணத்தை அதிகம் செலவு செய்பவர்களா? அதிகம் செலவு செய்யாமல் சேமிக்க சில வழிகள் இதோ!!

 

நம்மில் பலருக்கும் சேமிக்கும் பழக்கம் இருக்காது. எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் வரவுகளைவிட அதிகமாக இருக்கின்றது. சேமிக்கலாம் என்று சிறிதளவு பணத்தை எடுத்து வைத்தால் அதற்கும் செலவு வந்துவிடுகின்றது. இந்த பதிவில் செலவை குறைத்து எவ்வாறு சேமிப்பது என்பது குறித்து சில வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

 

பணத்தை சேமிக்க சிலர் உண்டியல்களை பயன்படுத்துவார்கள் முடிந்த அளவுக்கு சேமித்து பெரிய செலவிற்கு உண்டியலை உடைத்து சேமித்த பணத்தை செலவு செய்வார்கள். இன்னும் சிலர் வங்கி கணக்குகளில் சேமித்து வைப்பர். அவர்களும் அவசர தேவைக்காக வங்கி கணக்குகளில் சேமித்து வரும் பணத்தை எடுத்து செலவு செய்வார்கள். சேமிப்பதும் வழக்கமிக உள்ளது. இந்த பதிவில் பணத்தை சேமிப்பதற்கான சில வழிகளை தெரிந்து கொள்ளலாம்.

 

பணத்தை சேமிப்பதற்கான சில வழிமுறைகள்…

 

* எதாவது பொருளுக்கு பணம் செலுத்த வேண்டும் என்ற நேரத்தில் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தாமல் ரொக்க பணத்தை பயன்படுத்துங்கள் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்துங்கள்.

 

* பெரிய தொகைக்கு எதாவது பொருள்களை வாங்குவதற்கு முன்னர் பொறுமையாக யோசிக்க வேண்டும்.

 

* பொருள்களை வாங்கச் செல்லும் பொழுது முன்கூட்டியே தயார் செய்த பொருள்களின் பட்டியலை வைத்து பொருள்களை வாங்கலாம்.

 

* கேபிள் மற்றும் இணையதளத் தேவைகளை ஒரே திட்டத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

 

* புதியதாக எதாவது பொருள்கள் வாங்கச் செல்லும் முன்பு பழைய பொருள்களை பழுது பார்த்து பயன்படுத்தலாம். குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றது என்று அனைத்தையும் வாங்க வேண்டாம்.

 

* இஎம்ஐ போன்ற கட்டணங்களை காலதாமதமாக செலுத்துவதை தவிர்த்து விடுங்கள். தொகை செலுத்தும் முறையை ஆட்டோமோட் முறையில் வைக்க வேண்டும்.

 

* தள்ளுபடி விலையில் விற்கப்படும்  பிராண்ட்டட் பொருள்களை வாங்கி பயன்படுத்தலாம்.

 

* விடுமுறை காலங்களில் செல்லும் சுற்றுலாகளுக்கும், பிற செலவுகளுக்கும் முன்கூட்டியே திட்டம் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

 

* வீட்டில் மற்றும் வாகனங்களில் ஏற்படும் சிறிய சிறிய பழுதுகளை வெளியாட்களை வைத்து பழுது பார்க்காமல் முடிந்த அளவிற்கு நீங்களே பழுது பாருங்கள்.