நீங்கள் முருகன் பக்தரா..?? அப்போ இந்த உயிரினம் உங்கள் வீட்டிற்கு கண்டிப்பாக வரும்..!!

Photo of author

By Janani

நீங்கள் முருகன் பக்தரா..?? அப்போ இந்த உயிரினம் உங்கள் வீட்டிற்கு கண்டிப்பாக வரும்..!!

Janani

நீங்கள் ஒரு சிறந்த முருகன் பக்தராக இருந்தால் குறிப்பிட்ட சில உயிரினங்கள் உங்களின் வீடு தேடி வரும். பொதுவாகவே நமது வீடுகளில் தெய்வீக சக்தி இருக்கிறது என்றால், சில உயிரினங்கள் நமது வீட்டை தேடி வரும். அவ்வாறு வருகிறது என்றால், நமது குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தின் அருள் நமக்கு இருக்கிறது என்று அர்த்தம்.

நீங்கள் ஒரு முருகன் பக்தராக இருந்தால், உங்கள் வீட்டில் முருகன் இருந்தால் ஒரு சில அறிகுறிகள் தெரியும். பொதுவாக நமது வீடுகளில் தெய்வீக மனம் எப்பொழுதும் இருக்கிறது என்றால், கடவுளின் அருள் நமது வீட்டிற்கு இருக்கிறது என்று கூறுவார்கள். அதிலும் குறிப்பாக சந்தனம் பன்னீர் இது போன்ற வாசனைகள் இருந்தால், நமது வீட்டில் முருகன் நடமாட்டம் இருப்பதாக அர்த்தம்.

முருகன் பக்தர்களின் கனவில் குறிப்பாக செவ்வாய்க் கிழமை, சஷ்டி திதி, கிருத்திகை நட்சத்திரம், விசாகம் நட்சத்திரம் இது போன்ற நாட்களில் அவர்களது கனவில் முருகன், முருகனின் வாகனம், முருகனின் வேல் அல்லது முருகனின் ஆறுபடை வீடுகளை காண்பார்கள். இவ்வாறு அவர்களது கனவில் வந்தால் அவர்களுக்கு முருகனின் அருள் பரிபூரணமாக இருக்கிறது என்று அர்த்தம்.

அதேபோன்று முருகன் கோவிலுக்கு சென்று முருகனை வழிபட வேண்டும் என்று நினைக்கும் பொழுது, அதற்கான வாய்ப்பு விரைவில் கிடைத்துவிடும். அவ்வாறு இருந்தாலும் முருகனின் அருள் உங்களுக்கு இருப்பதாக அர்த்தம். ஆனால் ஒரு சிலர் முருகனை சென்று வழிபட வேண்டும் என்று பல நாட்களாக நினைத்து இருப்பார்கள், ஆனால் அவர்களால் முருகனைச் சென்று காண முடியாது. அதாவது அதற்கான சூழ்நிலை அவர்களுக்கு அமையாது.

எவர் ஒருவருக்கு முருகனின் அருள் என்பது பரிபூரணமாக இருக்கிறதோ, அவர்களால் மட்டுமே நினைக்கும் பொழுதெல்லாம் முருகனைச் சென்று வழிபட முடியும். அதிலும் முருகனின் தீவிர பக்தர்களாக இருப்பவர்களது வீட்டிற்கு முருகனின் வாகனமான மயில் கண்டிப்பாக வரும்.

அதேபோன்று நமது வீடுகளில் வளர்க்கும் சேவல்களை தவிர்த்து, வேறொரு சேவல் உங்கள் வீட்டிற்கு வருகிறது என்றாலும் முருகனின் அருள் உங்களுக்கு இருப்பதாக அர்த்தம். அதிலும் குறிப்பாக முருகனுக்கு உகந்த செவ்வாய்க் கிழமை, சஷ்டி, கிருத்திகை இதுபோன்ற நாட்களில் உங்கள் வீட்டிற்கு முருகனின் வாகனமான உயிரினங்கள் வருகிறது என்றால் அது மிகவும் சிறப்பு மிக்க ஒன்று.

நீங்கள் மிகவும் குழப்பமான சூழ்நிலையில் இருக்கும் பொழுது முருகனின் புகைப்படம், கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் இதுபோன்று முருகனுக்கு உகந்த படங்களை காணும் பொழுது, முருகனை நீங்கள் வழிபட்டால் உங்கள் குழப்பங்களுக்கு கண்டிப்பாக ஒரு தீர்வு கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது.

அதேபோன்று நீங்கள் முருகனின் தீவிர பக்தர்களாக இருக்கும் பொழுது, உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தையானது முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமை, சஷ்டி, கிருத்திகை நட்சத்திரம் இது போன்ற நாட்களில் பிறக்கும். அதாவது முருகனே உங்களுக்கு குழந்தையாக வந்து பிறப்பார்.

பசு மாடு உங்கள் வீட்டிற்கு வருகிறது என்றால் அந்த பசுவிற்கு உணவாக வாழைப்பழம், தண்ணீர் இது போன்றவை கொடுக்கும் பொழுது, தெய்வங்களின் அருள் உங்களுக்கு கிடைக்கும். மேலும் உங்கள் வீடு லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்கும்.