இதுகூட தெரியாத முட்டாளா?? அண்ணாமலையை விளாசிய எஸ்வி சேகர்!!
தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவியது. அனைத்து தொகுதிகளிலும் ஓரளவிற்கு அமைதியான வாக்குப்பதிவு நடைபெற்றது. கோவை தொகுதியை தவிர. ஏனெனில் அங்கு பாஜகவினர் சில புகார்களை கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதாவது கோவையில் பாஜக ஆதரவு வாக்காளர்கள் பெயர்களை வேண்டுமென்றே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி விட்டதாக குற்றம் சாட்டினர். மேலும் கோவையில் மட்டும் சுமார் ஒரு லட்சம் வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டு இருப்பதாக புகார்களை அள்ளி தெளித்தனர். இவை அனைத்திற்கும் அண்ணாமலை தான் முன்னோடி.
அதுமட்டுமல்ல இதனை கண்டித்து திடீரென பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த தொடங்கினார். அந்த வகையில் என் ஓட்டு என் உரிமை, நான் உயிரோடு இருக்கிறேன். என் வாக்கு மட்டும் இல்லை என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி திடீரென சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் பங்கேற்ற அத்தனை பேரும் நடந்து முடிந்த தேர்தலில் வாக்களித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் வாக்களித்ததற்கு அடையாளமாக அத்தனை பேரின் கை விரல்களிலும் மை உள்ளது. இதனை கண்ட பலரும் பாஜகவை டிரோல் செய்ய தொடங்கினார்கள். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று சொல்லி தானே போராட்டம் நடத்துனீங்க? அப்போ எப்படி வாக்கு போட்டீங்க என்பதுபோல கேள்விகளை முன்வைத்தனர்.
இந்நிலையில் நடிகரும் பாஜக ஆதரவாளருமான எஸ்வி சேகரே பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்துள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “ஒருத்தருக்கு ஒரு ஓட்டுதான்னு கூட தெரியாத முட்டாள். உன் கையில இருக்குற அடையாள மை 10 வருஷத்துக்கு முன்னாடி தேர்தல்ல போட்டதா? தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி. நேர்மை தான் அடிப்படை சேவை என்பது தெரியாத திருட்டுத்தனம்” என விமர்சித்துள்ளார்.