ரீல்ஸ் கிரியேட்டர்களா நீங்கள்? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

Photo of author

By Sakthi

ரீல்ஸ் கிரியேட்டர்களா நீங்கள்? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
ரீல்ஸ் கிரியேட்டர்களுக்காகவே தமிழக அரசு தற்பொழுது முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது வேறு ஒன்றும் இல்லை. ரீல்ஸ் கிரியேட்டர்களுக்காக தமிழக அரசு நடக்கவிருக்கும் ஒரு முக்கிய போட்டி குறித்த அறிவிப்பு தான்.
தற்பொழுது தொழில்நுட்பம் வளர்ந்து வருகின்றது. தொழில்நுட்பம் வளர்ந்து வருவதற்கு ஏற்ப நாமும் மாறிக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் தற்பொழுது சமூக வலைதளங்கள் நம்முடைய வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பொழுதுபோக்குக்காக பயன்படுத்தத் தொடங்கிய சமூக வலைதளங்கள் தற்பொழுது ஒரு சிலருக்கு சமூக வலைத்தளங்களில் தான் வாழ்க்கையே இருக்கின்றது. அதாவது அனைவரும் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காகவும் ஒவ்வொருவரின் தனித்திறமைகளை வெளிகாட்டும் விதமாகவும் சமூக வலைதளங்கள் முக்கிய வசதிகளை வழங்கி வருகின்றது.
அதில் ஒன்று ரீல்ஸ் வசதி ஆகும். ஒவ்வொரு சமூக வலைதளத்திற்கும் இது முக்கியமான பகுதியாக இருக்கின்றது. இன்றைய காலத்தில் சிறிய குழந்தை முதல் தாத்தா பாட்டி வரை ரீல்ஸ் செய்கின்றனர். சமையல், கல்வி, நடிப்பு, அழகுக்கலை என்று பல வகைகளில் பலரும் ரீல்ஸ் செய்கின்றனர்.
அதே போல பல இடங்களிலும் மக்கள் ரீல்ஸ் செய்கின்றனர். இந்த ரீல்ஸ் மக்களை பிரபலப்படுத்தும் என்றாலும் அதே சமயம் உயிருக்கு ஆபத்தையும் ஏற்படுத்துகின்றது. அதாவது சமீப காலமாக ரீல்ஸ் செய்யும் பொழுது ஏற்படும் விபத்துகள் குறித்து நமக்கு செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் தமிழக அரசு தற்பொழுது ரீல்ஸ் கிரியேட்டர்ஙளுக்கான முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது தமிழக அரசு தற்பொழுது மக்களுக்காக காப்பீடு திட்டம், நான் முதல்வன் திட்டம், பெண்களுக்காக உரிமை தொகை திட்டம் என்று பல வகையான திட்டங்களை வழங்குகின்றது. அதில் முக்கியமான 5 திட்டங்களில் எதாவது ஒரு திட்டம் பற்றி ரீல்ஸ் செய்து அனுப்பும் நபர்களில் சிறந்த 3 ரீல்ஸ் கிரியேட்டர்களுக்கு அமைச்சர் நேரில் அழைத்து சான்றிதழ் வழங்குவார் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
இது தொடர்பான அந்த அறிவிப்பில் “உங்களின் திறமைக்கு ஒரு அரிய வாய்ப்பு. தமிழக அரசு வழங்கும் 5 அசத்தலான திட்டங்களில் ஏதேனும் ஒன்றை குறித்து  ரீல்ஸ் செய்து அனுப்ப வேண்டும். இந்த ரீல்ஸ் 1 நிமிடம் அளவு இருக்க வேண்டும்.
உங்கள் ரீல்ஸ் வீடியோவை [email protected] என்ற ஜிமெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த 3 ரீல்ஸ்களின் கிரியேட்டர்ஙளுக்கு மாண்புமிகு செய்தி மக்கள் தொடர்பு அமைச்சர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்குவார். தேர்ந்தெடுக்கப்படும் ரீல்ஸ்களின் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் வெளியிடப்படும். அனைவரும் ரீல்ஸ் செய்து ஆகஸ்ட் 15க்குள் அனுப்ப வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.