விளையாட்டு வீரர்களா நீங்கள்? SBI வங்கியில் மாதம் 40000 சம்பளத்துடன் வேலை!

Photo of author

By Sakthi

விளையாட்டு வீரர்களா நீங்கள்? SBI வங்கியில் மாதம் 40000 சம்பளத்துடன் வேலை!
SBI என்று அழைக்கப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக இருக்கும் 68 காலிப்பணியிடங்களை விளையாட்டு வீரர்கள் என்ற பிரிவில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. கடைசி தேதி ஆகஸ்ட் 14ம் தேதி என்பதால் தகுதியான விளையாட்டு வீரர்கள் அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
SBI வங்கி வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு பற்றிய கூடுதல் விவரங்கள்…
நிறுவனத்தின் பெயர் : பாரத் ஸ்டேட் வங்கி(SBI)
பணியின் பெயர் : கிளார்க், ஆபிசர்ஸ்
காலிப்பணியிடங்கள் : 68 கிளார்க்(51), ஆபிசர்ஸ்(17)
வேலையின் வகை : மத்திய அரசு வேலை
பணியிடம் : இந்தியா முழுவதிலும் உள்ள கிளைகளில்
வயது : ஆபிசர்ஸ் – 21 வயது முதல் 30 வயது வரை. கிளார்க் – 21 வயது முதல் 28 வயது வரை
கல்வித் தகுதி : தகுதியும் விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்கள் எதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் இந்திய குடிமகனாக/மகளாக இருக்க வேண்டும்.
தகுதி : கிளார்க் – கிளார்க் பதவிக்கு விண்ணப்பிக்கும் விளையாட்டு வீரர்கள் மாநில அளவிலோ அல்லது மாவட்ட அளவிலோ அல்லது யுனிவர்சிட்டி அளிவிலோ டிஸ்டின்சன் வாங்கி இருக்க வேண்டும். அல்லது யுனிவர்சிட்டி அளவில் டிஸ்டின்சன் வாங்கிய அணியில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
ஆபிசர் – ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விளையாட்டு வீரர்கள் இந்தியாவுக்காக இண்டர்நேஷ்னல் விளையாட்டில் விளையாடி இருக்க வேண்டும்.
சம்பளம் : ஆபிசர்ஸ் – 48480 ரூபாய் முதல் 85920 ரூபாய் வரை.
                   கிளார்க் : 24050 முதல் 64480 ரூபாய் வரை
தேர்வு செய்யப்படும் முறை : ஷார்ட் லிஸ்ட் மற்றும் அசெஸ்மென்ட் தேர்வு முறை
விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினருக்கும் ஓபிசி பிரிவினருக்கும், இ.டபள்யூ.எஸ் பிரிவினருக்கும் 750 ரூபாய். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கும் பி.டபிள்யு.பி.டி பிரிவினருக்கும் கட்டணம் கிடையாது.
விண்ணபிக்கும் முறை : விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் SBI வங்கியின் www.sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள் : ஆகஸ்ட் 14(14-08-2024)