பல்லிகளின் தொந்தரவு உங்கள் வீட்டில் அதிகமாக இருக்கிறதா..?? அப்போ இப்படி செய்து பாருங்கள் பல்லிகள் வராது..!!

Photo of author

By Janani

பல்லிகளின் தொந்தரவு உங்கள் வீட்டில் அதிகமாக இருக்கிறதா..?? அப்போ இப்படி செய்து பாருங்கள் பல்லிகள் வராது..!!

Janani

பல்லி என்பது அனைத்து வீடுகளிலும் சர்வ சாதாரணமாக உலாவ கூடிய ஒரு உயிரினம். இந்த பல்லியை அடித்து விட்டால் தலைவலி வந்துவிடும், பல்லி நம் மீது விழுந்தால் ஏற்படும் பலன் என நிறைய விஷயங்கள் பல்லியை குறித்து பேசப்பட்டு வருகின்றன.

இந்த பல்லியானது சமையலறையில் உள்ள மேடையின் மீது சாதாரணமாக ஊர்ந்து கொண்டிருக்கும் பொழுது, அது வெளியிடக்கூடிய சிறுநீர் மற்றும் எச்சத்தின் மூலம் நோய் தொற்றுகள் உருவாகவும் வாய்ப்புகள் உள்ளன. நமக்கு தெரியாமல் உணவுகளில் விழுந்து விட்டாலும் ஃபுட் பாய்சனாக மாறவும் வாய்ப்பு உள்ளது.

இந்த பல்லி என்பது நமது வீட்டில் உள்ள கொசு, ஈக்களைப் போலவே தேவையில்லாத ஒன்றுதான். அதிலும் குறிப்பாக கோடை காலத்தின் வெப்பம் காரணமாக இந்த பல்லிகள் வீடுகளை நோக்கி தான் அதிகம் வரும். சிலர் பாம்புகளை பார்த்து பயம் கொள்கிறார்களோ இல்லையோ, இந்த பல்லியை பார்த்து கண்டிப்பாக பயம் கொள்வார்கள்.

அதிக வெப்பமும் இல்லாத அதிக ஈரப்பதமும் இல்லாத இடத்தை தான் இந்த பல்லிகள் விரும்பும். எனவே தான் நமது வீட்டின் சமையலறை மற்றும் குளியலறையில் இந்த பல்லிகள் இருக்கின்றன. மேலும் குப்பைகள் இருக்கக்கூடிய இடங்களில் அதிகமான பூச்சிகள் இருக்கும். அந்தப் பூச்சியை உணவாக உட்கொள்ளவும் இந்த பல்லிகள் வரும்.

வீடுகளில் தண்ணீர் லீக்கேஜ் இருந்தாலும் அந்த இடத்தில் இருக்கும் குளிர்ச்சியின் காரணமாக, பல்லிகள் அதிகம் வரும். எனவே இது போன்ற பிரச்சனைகளை நமது வீடுகளில் சரி செய்து கொள்ள வேண்டும். வீட்டை சுத்தபத்தமாக, குப்பைகளை சேர்க்காமல் வைத்துக் கொள்வதும் அவசியம்.

இந்த பல்லியை நாம் கொள்ளவும் விரும்ப மாட்டோம். அதே சமயம் சிறிது லேசாக அந்த பல்லியின் மேல் அடித்து விட்டாலும் அது விரைவில் இறந்துவிடும். எனவே பல்லியை கொல்லாமல் எப்படி வீட்டை விட்டு வெளியேற்றுவது, என்பதற்கான குறிப்புகளை தற்போது காண்போம்.

1. முட்டையின் ஓட்டில் இருக்கக்கூடிய வாசனை பல்லியை அந்த இடத்திற்கு வரவழைக்காது. அதாவது இந்த வாசனை பல்லிக்கு பிடிக்காது.

2. அதேபோன்று வெங்காயத்தில் இருக்கக்கூடிய சல்பர் இன் வாசனையும் பல்லிக்கு பிடிக்காது. எனவே பல்லிகள் அதிகம் இருக்கக்கூடிய இடத்தில் வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்து விட்டால் பல்லிகள் வராது.

3. வெங்காயம் மற்றும் பூண்டினை சேர்த்து அரைத்து அதிலிருந்து சாற்றினை எடுத்து வீடு முழுவதும் தெளித்து விட்டோம் என்றால் கண்டிப்பாக பல்லிகள் வராது.

4. மிளகுத் தூளை தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை பல்லிகள் இருக்கக்கூடிய இடத்தில் தெளித்து விட்டாலும் பல்லிகள் வராது.

5. நாப்தலின் உருண்டை வாசனைக்கும் பல்லிகள் வராது.

6.காபியுடன் புகையிலை பொடியைக் கலந்து மற்றொரு சக்திவாய்ந்த பல்லி தடுப்பானை உருவாக்குங்கள். இந்த வலுவான வாசனை இந்த ஊர்வன உயிரினமான பல்லிகள் வீடுகளுக்குள் நுழைவதைத் தடுக்க உதவுகிறது.

7. சமையல் செய்யும் பொழுது மீதமாக கூடிய குப்பைகளையும், மீதமாக கூடிய சாதத்தினையும் இரவு நேரங்களில் வீட்டிற்கு உள்ளே வைத்துக் கொள்ளாமல் அவ்வபோது அகற்றி விடுவது நல்லது.

8. வீட்டின் ஜன்னல்களில் கொசு வலை அடிப்பது, வீட்டில் குப்பைகளை சேர்க்காமல் இருப்பது இது போன்ற சிறிய சிறிய விஷயங்களை செய்தாலே பல்லிகள் வராது.