மன உளைச்சலுக்கு ஆளாகிர்களா!! கஷ்டம் தீர இந்த 1 தீபத்தை ஏற்றி வணங்குங்கள்!!
சில சமயங்களில் நமக்கு வரும் கஷ்டங்களிலிருந்து மீண்டு வருவதற்க்கு வலியை தெரியாது. அடி மேல் அடி விழுந்து கொண்டே இருக்கும். இதனால் வீட்டில் சண்டை சச்சரவுகள், பார்க்கும் வேலைகளில் நிம்மதி இல்லாமல் போகும். இவ்வாறு மனமுடைந்து போய் நிற்கும் பொழுது உங்களை குல தெய்வங்களையும், நவகிரகங்களையும் நெனச்சு இந்த வழிபாட்டை செய்து வருகையில் கஷ்டங்களுக்கு நிச்சயமாக சீக்கிரம் ஒரு விடிவு பிறக்கும்.
நாம் செய்த பாவ புண்ணியங்களில் கணக்குகள் வைத்து தான் நமக்கு வரும் கஷ்டமும் நஷ்டமும் நம் வாழ்க்கையில் கிடைக்கும். கஷ்டம் என்று ஒன்று வரும் பொழுது நாம் செய்த பாவத்திற்கான மன்னிப்பை இறைவனிடம் கேளுங்கள். தெரியாம கூட பாவம் செய்ய மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்.
பெரிய அளவில் உள்ள அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவிற்கு நவதானிய ங்களை சேர்க்கவும். நவதானியத்தில் நல்ல எண்ணெயை ஊற்றி, பஞ்சு திரி போட்டு பூஜை அறையில் வைத்து தீபம் ஏற்றி, தீபத்திற்கு முன் அமர்ந்து, தீப ஒளியை பார்த்து மனதார உங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். இந்த தீபத்தை இந்த நாட்களில் தான் ஏற்ற வேண்டும் என்று ஒன்று கிடையாது. நமக்கு கஷ்டம் வரும் எந்த நாட்களாக இருந்தாலும் செய்யலாம். இவ்வாறு செய்து வருகையில் கஷ்டத்திற்கான தீர்வு ஏதாவது ஒரு வழியில் கிடைக்கும்.
நவ தானியங்களை, மஞ்சள் தடவிய வெள்ளைத் துணியில் இருக்க கட்டி நம் வாசலில் முன்புறம் கட்டி வைக்கவும். இவ்வாறு செய்கையில் வீட்டில் எந்த ஒரு கஷ்டமும் வராது என்பது நம் சாஸ்திரத்தில் சொல்லக்கூடிய ஒரு பரிகாரம் தான். இவ்வாறு செய்து உங்கள் கஷ்டத்தை தீர்த்துக் கொள்ளுங்கள்.