தீயாக பரவும் குரங்கு அம்மை நோய்!! இந்த அறிகுறிகள் உடம்பில் தோன்றினால் எச்சரிக்கை!!

Photo of author

By Jeevitha

 

தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மக்கள் குரங்கு அம்மை என்னும் புதிய வகை நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் இந்த தொற்றால் ஆப்பிரிக்க நாட்டு மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது நிறைய நாடுகளில் பரவி மக்களைத் துன்புறுத்தி வருகிறது.

ஐநூற்று இருபத்து நான்கு பேரை இத்தொற்று உயிரிழக்கச் செய்துள்ளது. மேலும் பதினேழாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த குரங்கு அம்மை நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பத்தில் ஒருவர் என்ற ரீதியில் இந்த தொற்றினால் பாதிப்படைந்த பின் உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்க ஒன்று.

2022 ஆம் வருடத்தில் கண்டறியப்பட்ட இந்த குரங்கு அம்மை நோய்த் தொற்றானது  தற்போதைய நிலவரப்படி பெரும்பாலான உலக நாடுகளில் பரவி வருகின்றது. இந்த தொற்றானது ஆய்வின் அடிப்படையில் ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதருக்கு பரவாது எனினும் விலங்குகள் குரங்கு அம்மைத் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தால் அதன்மூலம் மனிதர்களுக்கு பரவக் கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி புதிதாகப் பரவி வரும் குரங்கு அம்மை தொற்றினால் தமிழ் நாட்டில் யாரும் பாதிக்கப்படவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது.

மேலும்  இரண்டு முதல் நான்கு வாரம் வரையிலான தொடர் காய்ச்சல், நிணநீர் கணுக்கால் வீக்கம், சீல் வடிதல், தோல் அரிப்பு, தசை வலி, முதுகு வலி, உடல் சோர்வு, தலை வலி போன்றவை ஏற்பட்டால் அது குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறியாகக் கூட இருக்கக் கூடும் என்று விளக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநரான டெட்ரோஸ் அதனோம் அவர்களால் அவசரக்குழு கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்நோய்த் தொற்றிற்கான அவசர நிலையை இவ்வமைப்பானது பிறப்பித்துள்ளது.