முகத்தில் முகப்பருக்கள் அதிகமாகி விட்டதா? அப்போ முட்டையை இப்படி பயன்படுத்துங்க! 

Photo of author

By Sakthi

முகத்தில் முகப்பருக்கள் அதிகமாகி விட்டதா? அப்போ முட்டையை இப்படி பயன்படுத்துங்க!
முகத்தில் உள்ள முகப்பயுக்களை முழுமையாக நீக்க முட்டையின் வெள்ளைக் கருவை எப்படி பயன்படுத்துவது என்பத குறித்து இந்த பதிவின் மூலமாக  தெரிந்து கொள்ளலாம்.
ஒரு சிலர் அதிகமாக எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை உண்பார்கள். அவர்களுக்கு முகத்தில் முகப்பருக்கள் அதிகமாக வரும். அதே போல உடல் சூடு காரணமாகவும் முகப்பருக்கள் அதிகமாக வரும். இதை முட்டையின் வெள்ளை கரு மற்றும் ஒரு சில பொருட்களை வைத்து நீக்கலாம். அது எவ்வாறு என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* முட்டையின் வெள்ளை கரு
* எலுமிச்சை சாறு
* தேன்
தயார் செய்யும் முறை:
முதலில் ஒரு சிறிய பவுல் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் ஒரு டீஸ்பூன் அளவு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் அரை டீஸ்பூன் அளவு தேன் சேர்த்து இறுதியாக நன்கு கலந்து கொள்ள வேண்டும். முக்கப்பருக்களை நீக்கும் ரெமிடி தயார்.
பயன்படுத்தும் முறை:
பின்னர் இதை எடுத்து முகத்தில் தேய்த்துக் கொள்ள வேண்டும். சுமார் 15-20 நிமிடங்கள் அப்படியே விட வேண்டும். நன்கு காய்ந்த பின்னர் ஈரத் துணியால் முகத்தை துடைத்து இதை எடுக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவி காய வைக்க வேண்டும். முகம் காய்ந்த பின்னர். முகத்திற்கு மாய்சுரைசர் பயன்படுத்தலாம். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள முக்கப்பருக்கள் மறையும்.