இப்பொழுது நீங்கள் AC வாங்க போகிறீர்கள் என்றால் என்னென்ன வகையான AC உள்ளது? எந்த அறைக்கு எந்த வகையான AC யை போட்டால் நன்றாக இருக்கும்? எந்த AC யை போட்டால் கரண்ட் பில் குறைவாக வரும்? என்பதையெல்லாம் தெரிந்து கொண்ட பின்னரே AC வாங்க வேண்டும்.
AC களில் WINDOW AC,SPLIT AC, INVERTER AC ,NON-INVERTER AC என பல வகைகள் உள்ளன.
1.WINDOW AC:
இந்த விண்டோ ஏசி வகையில் மொத்த பாகங்களும் ஒரே பாக்ஸில் அடங்கிவிடும். இந்த ஏசியை ஜன்னல் சுவரிலேயே மிக எளிதாக பொறுத்து விடலாம். ஆனால் இந்த வகை ஏசியில் கொஞ்சம் சத்தம் ஏற்படும். ஒரு சிறிய சத்தம் வந்தாலும் தூக்கம் வராது என்பவர்களுக்கு இந்த வகை ஏசியை வாங்க வேண்டுமா என யோசித்து வாங்குவது நல்லது.
2.SPLIT AC:
இந்த வகை ஏசி தான் இன்று பெரும்பாலானோர் வீடுகளில் வாங்கி வைத்துள்ளனர். இந்த ஏசி விரைவிலேயே நமது அறையை குளுகுளுவென மாற்றிவிடும்.
3.INVERTER AND NON-INVERTER AC:
இன்வெர்ட்டர் ஏசியில் 25 டிகிரி செல்சியஸ் வைத்தோம் என்றால் அது தொடர்ந்து 25 டிகிரி செல்சியஸிலேயே இருக்கும். ஆனால் நான் இன்வெர்ட்டர் ஏசியில் 25 டிகிரி செல்சியஸ் வைத்தோம் என்றால் அந்த நிலைக்கு வந்த உடனேயே ஏசி ஆப் ஆகிவிடும் பின்னர் வெப்பம் அதிகமான பின்னரே மீண்டும் ஏசியானது ஆன் ஆகும்.
அதேபோன்று இன்வெர்ட்டர் ஏசியில் EB பில் குறைவாகவும், நான் இன்வெர்ட்டர் ஏசியில் EB பில் அதிகமாகவும் வரும்.
இன்வெர்ட்டர் ஏசியானது பத்து வருட வாரண்டி உடனும், நான் இன்வெர்ட்டர் ஏசியானது 5 வருட வாரண்டி உடனே வரும்.
அதேபோன்று இன்வெர்ட்டர் ஏசியை காட்டிலும் நான் இன்வெர்ட்டர் ஏசி 2000 முதல் 3000 வரை விலை அதிகமாக இருக்கும்.
பொதுவாக ஏசி வாங்க போகிறோம் என்றால் நமது அறையின் அளவு எவ்வளவு இருக்கும்? நமது அறையில் வெயில் ஆனது எந்த அளவிற்கு வரும்? நமது அறையின் வெப்பநிலை எந்த அளவிற்கு இருக்கும்? என்பதை எல்லாம் தெரிந்து கொண்ட பின்னரே ஏசியை வாங்க வேண்டும். ஏனென்றால் உதாரணமாக நமது அறையானது 90 ஸ்கொயர் ஃபீட் கும் குறைவாக இருந்தால் 0.75 டன் எடையுள்ள ஏசியை வாங்க வேண்டும்.91-1300 sq.ft அளவுள்ள அறை இருந்தால் 1 டன் எடையுள்ள ஏசி சரியாக இருக்கும்.
இந்த முறையில் அறையின் அளவைப் பொருத்து ஏசியின் எடையானது வேறுபடும். ஏசி அளவுகளில் உள்ள டண்களின் அளவு அதிகரிக்கும் பொழுது EB பில்லும் அதிகரிக்கும். அதேபோன்று 3 ஸ்டார் ஏசியை விட 5 ஸ்டார் உள்ள ஏசியை வாங்கினால் இபி பில் குறைவாக இருக்கும். ஆனால் ஏசியின் விலை அதிகமாக இருக்கும்.
ஏசியை இரவில் மட்டும் தான் பயன்படுத்துவோம் அல்லது வெயில் காலங்களில் மட்டும் தான் பயன்படுத்துவோம் என இருப்பவர்களுக்கு 3 ஸ்டார் ஏசி சரியாக இருக்கும். அதேபோன்று ஏசியில் உள்ள காயில் ஆனது காப்பர் காயிலாக இருந்தால் நல்லது. அதே அலுமினியம் காயிலாக இருந்தால் சீக்கிரம் ஏசி பழுதாகிவிடும்.
ஏசியை வெயில் காலத்திற்கு மட்டுமே என பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு வெயில் காலங்களில் மட்டுமே பயன்படுத்தினால் அதில் தூசி படிந்து ஏசி சரியாக இயங்காது. எனவே தினமும் சிறிது நேரம் ஏசியை ஆன் செய்ய வேண்டும்.