சித்த மருத்துவத்தில் இந்த பிரண்டைக்கு வஜ்ரவல்லி என்ற சிறப்பு பெயரும் உண்டு. வஜ்ரம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் வலிமை வாய்ந்த ஒன்று என்று பொருள்படும். மேலும் இந்த பிரண்டையை வைரம் என்றும் கூறுவார்கள். வைரம் எவ்வளவு வலிமை வாய்ந்ததோ அதனைப் போன்று இந்த பிரண்டையை நாம் உண்ணும் பொழுது நாமும் வலிமையை பெறுவோம். இந்த பிரண்டையின் மருத்துவ குணங்களை நாம் அறிந்து கொண்டால் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் நாம் இந்த பிரண்டையை ஒரு சிறந்த மருந்தாகவும், உணவாகவும் எடுத்துக் கொள்வோம். அவ்வளவு சக்தி வாய்ந்த ஒன்று இந்த பிரண்டை.
உணவே மருந்து என்பதற்கு இணங்க இந்த பிரண்டை நமக்கு பல விதங்களில் உதவி வருகிறது. இதில் விட்டமின் சி, கால்சியம், நார்ச்சத்து போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்த தாவரமாகவும் இது திகழ்கிறது. பிரண்டை செடிகளில் பலவிதமான பிரண்டை செடிகள் உள்ளன. ஆனால் பெரும்பாலும் நாட்டு மருந்து கடைகளிலும், வீடுகளிலும் அனைவரும் பார்க்கக்கூடிய ஒன்று நான்கு பட்டை கொண்ட பிரண்டை செடியாகும். இத்தகைய பல நன்மைகளை தரக்கூடிய பிரண்டை செடிகளை நமது வீட்டில் வளர்ப்பதனால் மருத்துவம் ரீதியாகவும் சரி, ஆன்மீகம் ரீதியாகவும் சரி, பல நன்மைகளை தரக்கூடியதாக இருக்கிறது.
இந்த பிரண்டை செடியை நமது வீடுகளில் வளர்ப்பதனால் வீட்டில் எந்தவித சண்டை சச்சரவுகளும் ஏற்படாது. மேலும் எதிர்மறை ஆற்றல்கள் விலகி நேர்மறையான ஆற்றல்கள் பரவும். இந்த செடியை வீட்டில் வளர்த்தால் மட்டும் போதாது அதனை துவையல் செய்து சாப்பிட வேண்டும். அப்போதுதான் இந்த நன்மைகள் அனைத்தும் நமக்கு கிடைக்கும். ஏனென்றால் இந்த துவையலை நாம் உண்ணும் பொழுது நமது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்து நமது இதயம் சீராக செயல்படும். இதனால் எந்த வித பிரச்சனைகள் ஏற்பட்டாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற மன தைரியம் நம்மிடம் ஏற்படும்.
மேலும் இந்த பிரண்டை துவையலை சாப்பிடுவதன் மூலம் ஆண்களுக்கு ஆண்மை குறைவும், பெண்களுக்கு சரியற்ற மாதவிடாய் பிரச்சனையும் சரியாகும். இத்தகைய உடல் ரீதியான பிரச்சனைகள் அனைத்தையும் இந்த பிரண்டை சரி செய்வதால் கணவன் மனைவி இடையே எந்தவித பிரச்சனையும் ஏற்படாது என்று ஆன்மீகம் ரீதியாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன.
மேலும் இந்த பிரண்டை செடியை நமது வீடுகளில் வளர்த்து அடிக்கடி இதனை சாப்பிட்டு வருவதன் மூலம் சோர்வு நீங்கி ஞாபக சக்தி அதிகரிக்கும். இதனால் நமது வீடுகளிலும் தொழில் செய்யும் இடத்திலும் எந்த ஒரு வேலையை சொன்னாலும் சுறுசுறுப்பாக இயங்கி அதனை விரைவில் செய்து முடிப்போம். இதனால் குடும்பத்திலும் எந்த ஒரு இடத்திலும் சண்டை சச்சரவுகள் ஏற்படாது. தொழிலிலும் சோர்வின்றி சுறுசுறுப்பாக இயங்கி செயல்படுவதால் பண வரவும் அதிகரிக்கும்.
இதனால்தான் மருத்துவம் ரீதியாகவும் சரி, ஆன்மீகம் ரீதியாகவும் சரி பிரண்டை செடியினை நமது வீடுகளில் வைத்து வளர்த்து வருவது மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது.