சில வீடுகளில் வெள்ளை எருக்கன் செடியை வளர்த்து வருவதை நாம் பார்த்திருப்போம் அல்லது தானாகவே அந்த செடி முளைத்தும் வளர்ந்து கொண்டிருக்கும். இந்த வெள்ளை எருக்கன் செடியினால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன என்பது குறித்த தகவல்களை நாம் காண்போம்.
இந்த வெள்ளை எருக்கன் செடியானது தெய்வீக அம்சம் கொண்டதாகவும், விண்ணுலகில் உள்ள தேவர்களின் மறுபிறவியாகவும் கருதப்படுகிறது. மேலும் சிவனின் அம்சமாகவும் இந்த வெள்ளை எருக்கன் செடி திகழ்கிறது. இத்தகைய தெய்வீகத் தன்மை வாய்ந்த செடியை நம் வீடுகளில் வளர்த்து வந்தால் அந்தச் செடியினை சுற்றி உள்ள இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த செடியின் சிறப்பம்சம் என்னவென்றால், நீரின்றி எந்த செடிகளும் வளராது. ஆனால் இந்த செடி நீரின்றி சுமார் 12 வருடங்கள் சூரியனின் சக்தி மூலமாகவும், காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சி வாழக்கூடிய செடியாகவும் திகழ்கிறது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வீக அம்சம் கொண்ட செடியாகவும் விளங்குகிறது.
இந்த வெள்ளை எருக்கன் செடியினை நமது வீட்டில் வளர்ப்பதன் மூலம் நமது வீட்டிற்குள் தீய சக்திகள், துஷ்ட சக்திகள் போன்றவை நமது வீட்டிற்குள் வராமல் பாதுகாக்கப்படும். என்னதான் இந்த காலம் நவீன காலமாக மாறினாலும் கூட இந்த வெள்ளை எருக்கன் செடியிலிருந்து நாற்றிணை எடுத்து அரைஞான் கயிறு திரித்து குழந்தைகளுக்கு அணிவித்து வருகின்றனர்.
குழந்தைகளுக்கு இவ்வாறு கட்டுவதன் மூலம் குழந்தைகளிடம் எந்தவித தீய சக்திகளும், கண் திருஷ்டிகளும் அண்டாமல் அந்த குழந்தை ஆரோக்கியமாக வாழ ஒரு பாதுகாத்து கவசமாக இந்த அரைஞான் கயிறு விளங்கும். இந்த செடியினை நமது வீட்டில் வளர்க்கா விட்டாலும் கூட அந்த செடியின் தண்டினை நமது தலை வாசலில் கட்டி வைப்பதன் மூலம் அந்த செடியை வளர்ப்பதினால் ஏற்படக்கூடிய அனைத்து நன்மைகளும் இதன் மூலம் நமக்கு கிடைக்கும்.
இந்த செடியானது அதிர்ஷ்டம் தரக்கூடிய செடியாகவும் கருதப்படுகிறது. ஏனென்றால் இந்த செடியின் இலைகளை கொண்டு விளக்கேற்றும் பொழுது நமது எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது. இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்றால் ஒரு தட்டில் வெள்ளை எருக்கன் இலையை எடுத்து அதன் மேல் ஒரு ரூபாய் நாணயத்தினை வைத்து அந்த நாணயத்தின் மேல் கற்பூர தீபத்தினை ஏற்றி நமது குலதெய்வத்தினையோ அல்லது இஷ்ட தெய்வத்தினையோ நினைத்து மனதார வழிபடுவதன் மூலம் நமது எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும்.
ஆன்மீகம் ரீதியான நன்மைகள் மட்டுமின்றி அறிவியல் ரீதியாகவும் இந்த செடி பல நன்மைகளை அளித்து வருகிறது. அதாவது இந்த வெள்ளை எருக்கன் செடியின் இலையானது நச்சுக்களை போக்கக்கூடியது எனவும், அதே போன்று நமது உடலில் வீக்க கட்டிகள் ஏதேனும் இருந்தால் அதன் மீது இந்த இலையை அரைத்து கட்டுவதன் மூலம் கட்டிகள் மற்றும் வலிகள் போக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த செடியில் உள்ள பூவானது ஆஸ்துமா, நெஞ்சு சளி, சிறுநீரகக் கோளாறு போன்ற பல பிரச்சனைகளுக்கும் தீர்வை தரும்.
இத்தகைய நன்மைகளை தரக்கூடிய இந்த வெள்ளை எருக்கன் செடியை எங்கு பார்த்தாலும் நமது வீட்டில் வைத்து வளர்த்து வரலாம். இதன் மூலம் பலவிதமான அதிர்ஷ்டங்களையும், பாதுகாப்பையும் நமக்கு இந்த செடி தரும்.