துளசி செடியை வைத்து வழிபாடு செய்பவர்களா நீங்கள்!!எந்த திசையில் வைத்தால் பலன் கிடைக்கும்!!

Photo of author

By Janani

துளசி செடியை வைத்து வழிபாடு செய்பவர்களா நீங்கள்!!எந்த திசையில் வைத்தால் பலன் கிடைக்கும்!!

Janani

Are you people who worship with Tulsi plant!! Whichever direction you put it will get results!!

துளசி செடியினை வழிபாடு செய்வது என்பது இந்து சமயங்களில் மிகவும் முக்கியமான வழிபாடாக கருதப்படுகிறது. துளசி செடி என்பது மகாலட்சுமி மற்றும் மகாவிஷ்ணுவின் அம்சமாகவும் விளங்குகிறது. துளசிச் செடியினை வீட்டில் வைத்து வழிபாடு செய்பவர்கள் ஒரு குறிப்பிட்ட திசையில் வைத்து தான் வழிபாடு செய்ய வேண்டும். ஏனென்றால் அந்த திசை தான் துளசி செடிக்கு உகந்த திசையாகவும், தேவையான சக்திகளையும் கொடுக்கும்.
துளசி செடி என்பது வாஸ்து சாஸ்திரத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. இந்த துளசி செடியானது ஒரு வீட்டினை கட்டும் பொழுதும் சரி, கட்டி முடித்த பிறகும் சரி வாஸ்து பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய ஒன்றாகவும் விளங்குகிறது. வீட்டினை கட்டுவதற்கு என கடக்கால் எடுக்கும் பொழுது இந்த துளசி செடியின் வேரினை போட்டு எடுக்கும் பொழுது அந்த வீட்டில் உள்ள வாஸ்து பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
வீட்டில் உள்ள எதிர்மறையான சக்திகளை அழிக்கக்கூடிய சக்தி இந்த துளசி செடிக்கு தான் உள்ளது. என்னதான் மிகுந்த சக்தி வாய்ந்த செடியாக இருந்தாலும் அதனை வீட்டிற்குள் வளர்க்கக்கூடாது எனவும் அதனை வீட்டிற்கு வெளியில் தான் வளர்க்க வேண்டும் எனவும் கூறுகின்றனர். நாம் தினமும் எழுந்தவுடன் துளசி செடியை பார்ப்பது நமக்கு ஒரு சிறந்த முன்னேற்றத்தை கொடுக்கும் எனவும் கூறப்படுகிறது. துளசி செடிக்கு என ஒரு மாடம் வைத்து அதற்கு தினமும் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சிறந்த அனுகூலத்தை பெற முடியும் எனவும் வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகிறது.
ஏகாதசி மற்றும் கிரகண நாட்களில் துளசிச் செடியிலிருந்து இலைகளை பறிக்காமல் இருப்பது நல்லது. துளசி செடியினை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டு வந்தால் மகாலட்சுமி மற்றும் மகாவிஷ்ணுவின் அருளை பெற்று மன நிம்மதியுடன் வாழ முடியும். அதேபோன்று சனிக்கிழமை அன்று பெருமாளுக்கு துளசியினை வைத்து வழிபடுவதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். நாம் சுவாசிக்க கூடிய ஆக்ஸிஜனை அதிக அளவில் தரக்கூடிய செடியாகவும் இந்த துளசி செடி விளங்குகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த துளசி செடி இடம் தீட்டு காரியங்களின் போது செல்லக்கூடாது. அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி. துளசி செடியானது மனரீதியாக மட்டுமல்லாமல் உடல் ரீதியாகவும் பல நன்மைகளை தருகிறது. நமது உடலில் ஏற்படக்கூடிய அஜீரணம் மற்றும் இருதய கோளாறுகளை சரி செய்கிறது. துளசி இலையின் வாசனையை நுகரும் பொழுதும், துளசி இலையை சாப்பிடும் பொழுதும் நமது மன அழுத்தம் குறைவதாக கூறப்படுகிறது.
இருமல் மற்றும் சளிக்கு சிறந்த மருந்தாகவும் விளங்குகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது உதவுகிறது. சிறுநீரகக் கற்களையும் இது சரி செய்யும். துளசி இலையில் விட்டமின் A,C,K போன்ற சத்துக்கள் உள்ளன. மேலும் மெக்னீசியம், கால்சியம், புரோட்டின் போன்ற சத்துக்களும் உள்ளன. இத்தனை நன்மைகளைக் கொண்ட துளசி செடியினை பூஜை அறையை நாம் எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்வோமோ அதே அளவிற்கு இந்த துளசி மாடத்தையும் அதனை சுற்றியுள்ள இடங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் துளசி செடியினை வைத்து வழிபடும் பொழுது ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு பலன்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தென் கிழக்கு திசையில் துளசிச் செடியினை வைத்து வழிபடும் பொழுது திருமணத் தடைகள் நீங்கும் எனவும், தென்மேற்கு திசையில் துளசி செடியினை வைத்தால் பித்ரு தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் பெறலாம் எனவும் கூறப்படுகிறது.
வடகிழக்கு அல்லது வடக்கு திசையில் துளசி செடியை வைத்து வழிபட்டால் பண பிரச்சினைகள் நீங்கி வீட்டில் செல்வம், செல்வாக்கு மற்றும் பொருளாதாரம் உயரும். இந்த திசைகளில் வைக்க இயலாதவர்கள் கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் கூட துளசி செடிகளை வைக்கலாம். ஆனால் தப்பி தவறியும் கூட வடமேற்கு திசையில் வைத்து வழிபடக்கூடாது. ஏனென்றால் வாஸ்துபடி அந்த திசையில் கழிவறை வரக்கூடிய இடமாகும். எனவே புனிதமாக கருதக்கூடிய துளசி செடியினை வடமேற்கு திசையில் வைக்க கூடாது.