அண்ணாவின் பொன் மொழிகளை மேற்கோள் காட்டி பதிவிட்ட டிடிவி தினகரன்!! அதிமுக மாநாட்டை கூறுகிறாரோ??

0
130

அண்ணாவின் பொன் மொழிகளை மேற்கோள் காட்டி பதிவிட்ட டிடிவி தினகரன்!! அதிமுக மாநாட்டை கூறுகிறாரோ??

 

அறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழிகளை மேற்கோள் காட்டி நாளை(ஆகஸ்ட்20) நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டை பற்றி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

நாளை அதாவது ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுக கட்சியின் சார்பில் வீர எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த வீர எழுச்சி மாநாட்டுக்கு முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தலைமை தாங்கவுள்ளார். தென் மாவட்டங்களில் இருந்து மட்டும் 4 லட்சம் பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக மாநாடு குறித்து டிடிவி தினகரன் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

அந்த பதிவில் அண்ணா அவர்களின் பொன்மொழிகளை மேற்கோள் காட்டி “அன்றைய காலகட்டத்தில் பெரும் பணம் செலவழித்து கட்சி ஒன்று, சென்னை ஆவடியில் நடத்த இருந்த மாநாடு பற்றிய பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் இன்று நடக்கவுள்ள துரோகிகளின் மாநாட்டோடு பொருந்துவது போல் உள்ளது.

 

“தம்பி பெரும் பணம் செலவழித்து, தோரணங்களும் தோகைகளும் ஓவியங்களும் கொண்டு மாநாடு நடத்தி பயன் எதுவும் வராது.

 

திறமை மிக்க ஓவியன் ஒருவன் காட்டில் உள்ள நல்ல கனி தரும் மரங்களை அப்படியே நம் கண்முன்னே கனிகள் காய்த்து தொங்குவதை போல் ஓவியமாக வரைந்தான் . அனைவரும் கண்டு

மெய்சிலிர்த்து வியந்தனர்.

 

ஆனால் தம்பி, அந்த ஓவியத்தில் உள்ள கனிகளை கண்டு ரசிக்க தான் முடியுமே தவிர அதனை உண்டு நம் பசியை போக்க முடியாது.

 

அதே போன்று தான் தம்பி பெரும் பணம் மட்டுமே செலவழித்து நடத்தப்படும் மாநாடுகள் மக்களிடம் துளியும் நம்பிக்கை பெறாது, அவை அனைத்தும் பயனற்றது”.

 

“சாதனைகளைக் காட்டி ஓட்டு வாங்கிட முடியாது என்றாலும் நோட்டுகளைக் காட்டி ஓட்டுகளை வாங்கிடலாம் என்ற துணிவு தான் தம்பி அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை” என்றுபதிவிட்டுள்ளார்.

Previous articleஅதை செய்தால் உடனடியாக வாய்ப்பு கிடைக்கும்! பிரபல நடிகைக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவம்!!
Next articleகச்சத்தீவின் வரலாறு தெரியாமல் வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது!! முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ்!!