அந்த காலங்களில் நமது முன்னோர்கள் அரிசி, நெல், கம்பு போன்ற அனைத்து தானிய வகைகளையும் அளப்பதற்கு படியையே பயன்படுத்தினர். ஆனால் தற்போது எதையாவது ஒன்று அளக்க வேண்டும் என்றால் அதற்காக பிளாஸ்டிக் கப் மற்றும் அளப்பதற்கு எனவே அளவு கப் என நிறைய வந்து விட்டது. அந்த காலங்களில் அவர்களின் தகுதிக்கு ஏற்ப படிகளை வாங்கி வைப்பர். அதாவது தங்க படி, வெள்ளி படி, பித்தளை படி என பல விதங்களில் வாங்கி வைத்துக் கொள்வர். நமது முன்னோர்கள் அளப்பதற்கு படியை பயன்படுத்தியதன் காரணம் தான் என்ன? நாம் தற்போது அளப்பதற்கு உபயோகப்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கப் நமக்கு நன்மையை தருமா? என்பது குறித்து காண்போம்.
இன்றும் ஸ்ரீரங்கத்தில் பெருமாளின் முன்னிலையில் வருடத்திற்கு ஏழு முறை நெல்லினை படியின் மூலம் அளந்து கொட்டுவார்கள். அதேபோன்று நமது பூஜை அறையில் வெண்கலத்தில் ஒரு படியினை வாங்கி வைப்பது சிறப்பை தரும். நமது வீட்டின் பூஜையறையில் நாம் பூஜை செய்யும் பொழுது ஒரு படியில் நெல்லினை போட்டு அதன் மேல் அன்னத்திணை வைத்து வழிபடும் பொழுது நமக்கு அன்ன குறைபாடு ஏற்படாமல் இருக்கும்.
நாம் சமையலறையில் மற்ற பொருட்களை அளப்பதற்கு பிளாஸ்டிக் கப்பினை பயன்படுத்தினாலும் கூட பூஜை அறையில் கண்டிப்பாக வெண்கலம் அல்லது பித்தளையினால் ஆன படியினை தான் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். முடிந்தவர்கள் வெள்ளியில் கூட படியினை வாங்கி வைத்து வழிபாடு செய்யலாம். ஆனால் ஒருபோதும் பிளாஸ்டிக் பொருட்களை பூஜையறையில் பயன்படுத்தக் கூடாது.
இவைகள் மட்டுமின்றி இந்த உலகத்திற்கே படி அளப்பவர் என்றால் அது பெருமாள் என்றும், சைவ மதத்திற்கு சிவபெருமான் என்றும் சாஸ்திரம் கூறுகிறது. அதாவது மக்களுக்கு வழங்கக்கூடிய நல்ல காரியங்கள் மற்றும் கெட்ட காரியங்களை படி அளந்து நமக்கு வழங்குபவர் சிவபெருமானும் பெருமாளும் ஆவார். படியினை கொண்டு தினமும் அரிசியை அளப்பவர்கள் அரிசியை அள்ளிய பிறகு மீண்டும் அதனுள் நிரப்பி வைக்க வேண்டும். அதாவது படியினை குப்புற கமுத்தியோ அல்லது காலியாகவோ விடக்கூடாது.
பூஜை அறையில் படியினை வைத்து வழிபடும் பொழுது அதனுள் நெல்லினை போட்டு வைக்கலாம். அவ்வாறு நெல்லிணை போட்டு வழிபாடு செய்தால் அதனை ஒரு மூன்று மாதங்களுக்குப் பிறகு அந்த நெல்லினை ஒரு ஆற்றில் போட்டு விடலாம். அதுவே படியில் அரிசியினை வைத்து வழிபடுகிறோம் என்றால் அந்த அரிசியினை பௌர்ணமி நாட்களில் பொங்கல் செய்து உண்ணலாம். இதனால் சகல ஐஸ்வர்யமும், குபேரரின் அருளும் கிடைக்கும்.
காலங்கள் எவ்வளவுதான் மாறினாலும் கூட நமது பாரம்பரியத்தை நாம் என்றும் மறக்கக்கூடாது. எனவே படியினை பயன்படுத்தும் பழக்கத்தினை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாக பூஜை அறையில் படியினை பயன்படுத்தும் பொழுது நமக்கு சகல ஐஸ்வரியமும் கிடைத்து, நமது வீட்டில்அன்னம் குறையாத பாக்கியமும் கிடைக்கும்.