பெருமாளை வழிபடக்கூடிய முக்கியமான வழிபாட்டு பொருட்களுள் ஒன்று தான் இந்த துளசி. பெருமாள் வழிபாட்டில் துளசியை பயன்படுத்தினாலும் கூட, துளசிக்கு என தனியாக வழிபாட்டு முறைகளும் உள்ளது. துளசியை மாடத்தில் வைத்து பலரும் இன்று வழிபட்டு வருகின்றனர். ஒரு சிலருக்கு இந்த துளசி மாடத்தை எவ்வாறு வழிபடுவது என்பது தெரியும். ஆனால் ஒரு சிலருக்கு துளசி மாடத்தை வழிபடுவதற்கான வழிபாட்டு முறைகளை தெரியாமல் வழிபட்டு வருகின்றனர்.
முந்தைய காலங்களில் துளசி மாடம் என்பதை அனைத்து வீடுகளிலும் வைக்க வேண்டும் என்ற நியதி இருந்தது. ஆனால் இப்பொழுது அதனை கடைபிடிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய பேருக்கு கிடைப்பதில்லை. ஆனால் இன்றும் சிலர் துளசி மாடம் வைத்து வழிபட்டு வருகின்றனர். ஒரு வீடு என இருந்தால் அதில் துளசி செடி என்பது கண்டிப்பாக இருக்க வேண்டும்.
இது மருத்துவ குணம் வாய்ந்த நலனாகவும் நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். காலை எழுந்ததும் முதலில் வழிபட வேண்டியது இந்த துளசியை தான் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். துளசிக்கு என தனியாக மாடம் வைத்து வழிபட்டாலும் சரி, செடிகளை வளர்க்கக்கூடிய தொட்டிகளில் வைத்து துளசி செடியை வளர்த்தாலும் சரி இரண்டும் ஒன்றுதான்.
தினமும் அந்த துளசி செடிக்கு கீழே ஒரு விளக்கினை ஏற்றிவிட்டு, ஊதுபத்தி மற்றும் சாம்பிராணியை துளசி செடிக்கு காட்ட வேண்டும். அதன் பிறகு நெய்வேத்தியமாக கற்கண்டு அல்லது திராட்சை இது போன்ற எளிமையான பொருட்களை படைக்கலாம். அதன் பிறகு தீபம் ஏற்றி வழிபட்டு விட்டு பஞ்சபாத்திர செம்பில் உள்ள நீரை துளசி செடிக்கு ஊற்றி விட வேண்டும். இதுதான் துளசிச் செடியை தினமும் வழிபடக்கூடிய மிகவும் எளிமையான முறை ஆகும்.
துளசி செடியை தினமும் இவ்வாறு நாம் வழிபடுவதன் மூலம் மகாலட்சுமியின் அருள் மற்றும் நாராயணனின் அருள் ஆகியவற்றை பெறலாம். இது மட்டுமல்லாமல் நமது வீட்டில் லட்சுமி கடாட்சம் என்பது நிறைந்து இருக்கும். இந்த துளசி செடி என்பதை அனைத்து வீடுகளிலும் வைத்து கண்டிப்பாக வளர்க்க முடியும். எனவே துளசி செடியை அனைவரும் வழிபட்டு மகாலட்சுமி மற்றும் நாராயணனின் அருளை பெற வேண்டும்.