இன்றைய காலத்தில் உள்ள குழந்தைகள் பிறந்து ஒரு வருடத்தில் இருந்தே அடம்பிடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். அவர்கள் வளர்ந்து வேலைக்கு செல்லக்கூடிய காலங்கள் வரையிலும் பெற்றோர்களின் பேச்சை மதிப்பதே கிடையாது. இன்னும் சொல்லப்போனால் பிள்ளைகள் கூறுவதை தான் பெற்றோர்கள் கேட்க வேண்டிய சூழ்நிலை இன்றைய காலத்தில் உள்ளது.
ஒரு சில குழந்தைகள் பெற்றோர்களின் பேச்சை கேட்கா விட்டாலும் கூட, அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறி விடுகின்றனர். ஆனால் ஒரு சில குழந்தைகள் பெற்றோரின் பேச்சையும் கேட்பதில்லை, அவர்களின் எதிர்காலத்தை குறித்த கவலையும் இல்லாமல் வாழ்க்கையை கெடுத்தும் கொள்கின்றனர்.
பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் பெற்றோர்களின் பேச்சைக் கேட்டு, நல்லபடியாக நடந்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற்று அடுத்த நிலைக்கு உயர முடியும். ஆனால் பள்ளிக்கு செல்லக்கூடிய காலத்திலேயே பெற்றோர்களின் பேச்சைக் கேட்காமல் பல தீய செயல்களில் இறங்கவும் சென்று விடுகின்றனர்.
இவ்வாறு பெற்றோர்களின் பேச்சை கேட்காமல் அவர்களது வாழ்க்கையை கெடுத்துக் கொண்டிருக்கும் குழந்தைகளை திருத்துவதற்கு, ஒரு எளிய வழிபாட்டை பெற்றோர்களாகிய நீங்கள் செய்து வந்தால் கண்டிப்பாக பிள்ளைகள் உங்களது பேச்சை கேட்டு நடப்பார்கள்.
பள்ளிக்கு செல்லக்கூடிய காலத்திலேயே பிள்ளைகள் கேட்கக்கூடிய அனைத்தையும், பெற்றோர்கள் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். அதனை பெற்றோர்கள் செய்ய மறுத்தால் வீட்டை விட்டு வெளியேறி விடுவேன் அல்லது தவறான முடிவை எடுத்துக் கொள்வேன் என மிரட்டவும் செய்கின்றனர்.
இது போன்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இது மிகவும் எளிதான ஒரு பரிகாரம் இந்த பரிகாரத்தை 11 வாரங்கள் வீதம் வாரத்திற்கு ஒரு முறை, அதாவது 11 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். முதல் நாள் திங்கள் கிழமையில் இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கினால், அடுத்த வாரம் அதே திங்கள் கிழமை அதே நேரத்தில் செய்து கொள்ளலாம், ஆனால் எந்த கிழமையில் வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கிக் கொள்ளலாம்.
ஒரு தட்டில் சிறிதளவு மஞ்சள், குங்குமம் போட்டு இரண்டு மண் அகல் விளக்குகளை வைத்துக் கொள்ள வேண்டும். அந்த அகல் விளக்கிற்க்கும் மஞ்சள், குங்குமம், புஷ்பம் ஆகியவற்றை வைத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு அகல் விளக்கிற்க்கும் நடுவில் கற்றாழையை சிறிதளவு வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது அந்த அகல் விளக்கில் சுத்தமான நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு தீபத்தை ஏற்றி உங்களது குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு, நமது வேண்டுதல்களை கூற வேண்டும்.
இவ்வாறு குலதெய்வத்தை நினைத்து கற்றாலை தீபத்தை ஏற்றும் பொழுது உங்கள் வீட்டில் உள்ள தீய சக்திகள், தீய எண்ணங்கள் ஆகிய அனைத்தும் நீங்கி, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நேர்மறை எண்ணங்கள் கிடைக்கும். இவ்வாறு தொடர்ந்து 11 நாட்கள் செய்து வந்தால் கண்டிப்பாக உங்களது பிள்ளைகளின் மனநிலை மாறும்.