மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! மேன்மைகள் அதிகரிக்கும் நாள்!!

0
211
Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! மேன்மைகள் அதிகரிக்கும் நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மேன்மைகள் அதிகரிக்கும் நாள். சந்திர பகவான் லாப ஸ்தானத்தில் இருப்பதால் கண்டிப்பாக நல்லதே நடைபெறும். குடும்ப உறவு அற்புதமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் முன்னேற்றம் கூடி வரும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் லாபகரமாக நிறைவேறும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் கலைகட்டி இருப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சிறந்த சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு சில முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு எல்லா விதத்திலும் முன்னேற்றம் அதிகரிக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleஎச்சரிக்கை! இந்த குறியீட்டில் உள்ள பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பொருட்களை வாங்காதீர்கள்! மிகவும் ஆபத்து!
Next articleரிஷபம் ராசி- இன்றைய ராசிபலன்! மகிழ்ச்சிகள் அதிகரிக்கும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here