மேஷம் ராசி-இன்றைய ராசிபலன்!! ஆன்மீக சிந்தனையால் நலம் பெறும் நாள்!!

0
209
Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் ராசி-இன்றைய ராசிபலன்!! ஆன்மீக சிந்தனையால் நலம் பெறும் நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆன்மீக சிந்தனைகள் மூலம் நன்மைகள் வந்து சேரும் நாள். பஞ்சமஸ்தானம் ஆகிய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் ஆன்மீக சிந்தனைகள் அதிகரிக்கும்.

நிதி நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு கிடைக்காது. கணவன் மனைவி ஒற்றுமை குழந்தைகள் மூலம் அற்புதமாக நிகழும். குடும்ப உறுப்பினர்கள் பக்கபலமாக செயல்படுவார்கள்.

உத்தியோகத்தில் உங்களது கோரிக்கைகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். கொடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பான பாதையில் செல்லும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் குழந்தைகளின் முன்னேற்றத்தைக் கண்டு மணமகிழ்ந்து போவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் இந்த நேரத்தில் உங்களுக்கு கை கொடுத்து உதவுவார்கள். அரசியல்வாதிகள் முன்னேற்றம் அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleNIT நிறுவனத்தில் மாதந்தோறும் நல்ல ஊதியத்தில் பணிபுரிய விருப்பமா? உடனே விண்ணப்பியுங்கள் !
Next articleஉங்கள் உடலில் இரும்பு சத்து குறைவா? 7 நாட்களில் அதிகரிக்கும் எளிய வழிமுறை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here