மேஷம் – இன்றைய ராசிபலன்! வரவைக்காட்டிலும் செலவு அதிகரிக்கும் நாள்!!

0
188
Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் – இன்றைய ராசிபலன்! வரவைக்காட்டிலும் செலவு அதிகரிக்கும் நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வரவைக்காட்டிலும் செலவு அதிகரிக்கும் நாள். செலவுகளை சுப காரியம் செலவாகவோ அல்லது விலை உயர்ந்த பொருட்களை வாங்கி வைக்கலாம். நிதி இரட்டிப்பாக கிடைக்கும்.

 

கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளது. குடும்ப உறுப்பினர்களுக்காக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உருவாகலாம். தொழில் மற்றும் வியாபார அபிவிருத்திக்காக சில திட்டங்களை அதிரடியாக தீட்டுவீர்கள் அது வெற்றி அடையும். கொடுக்கல் வாங்கல்கள் எந்தவித குழப்பமும் இல்லாமல் அமைதியாகச் செல்லும்.

 

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு வீண் செலவு வந்து சேரலாம். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள்.

 

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் இல்லத் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை அணுகுவார்கள்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ராகவேந்திர ஸ்வாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிய திருமண நாளாக அமையும்.

Previous articleவிருச்சிகம் – தை நாளில் உங்களுக்கான இன்றைய ராசிபலன்!! உங்கள் குழந்தைகள் மூலம் பெருமை அடையும் நாள்!!
Next articleரிஷபம் – இன்றைய ராசிபலன்!! மேன்மைகள் அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here