மேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சலசலப்பு கலகலப்பு நிறைந்த நாள்!!
மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் சலசலப்பு மாலையில் கலகலப்பு நிறைந்த நாளாக இருக்கும். காலையில் சந்திர பகவான் கலஸ்திர ஸ்தானத்திலும் மாலைக்கு பிறகு அஷ்டம ராசிக்கு வருவதால் சங்கடங்களும் வந்து சேரும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவி விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் வேலை பளு சற்று குறையலாம். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்படுவது நல்லது. கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.
உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷம் தரும் செய்தி கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறந்து விளங்குவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி கண்டிப்பாக வந்து சேரும்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.