மேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

0
294
#image_title

மேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். உங்கள் ராசிக்குள் சந்திராஷ்டமம் வருவதால் எந்த ஒரு வேலையும் கவனமாக செய்வது நல்லது. கணவன் மனைவியிடையே பிரச்சனைகள் ஏழாம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். வாகன பயணங்களில் கவனமாக செயல்படுவது நல்லது.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில பிரச்சனைகள் எழலாம். அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்படுவது நல்லது. கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு வேலையும் இழுபறி ஆகிறதே என்ற கவலையுடன் காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் மந்தமான சூழ்நிலை உருவாகும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் முன் யோசனையுடன் நடந்து கொள்வது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சர்வேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

 

Previous articleஇந்த 2 பொருள் போதும் 30 நாளில் முடி உதிர்வை நிறுத்தி அடர்த்தியாக வளர செய்யும்! 
Next articleநரம்பு பிடிப்பு பிரச்சனைக்கு ஒரே தீர்வு! வெறும் வயிற்றில் இந்த ட்ரிங்க்கை குடித்தால் போதும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here