மேஷம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

0
237

மேஷம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது ஆகையால் அமைதியாக இருப்பது நல்லது.

கணவன் மனைவியிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது ஒற்றுமையை அதிகரிக்கும். வருமானம் வந்து சேர்வதில் சற்று காலதாமதம் ஆகலாம். பொருளாதாரம் ஓரளவிற்கு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை சுமை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு ஏற்றமிகு வாய்ப்புகள் இருக்கும் என்றாலும் சற்று கவனமாகவும் கூட்டாளிகளை அனுசரித்தும் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாடு கண்டிப்பாக தேவை.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண அரும்பாடு பட வேண்டி இருக்கும். அரசியல்வாதிகள் அமைதி காப்பது நல்லது. கலைத்துறையை சேர்ந்தவர்கள் கவனமுடன் இருப்பது மிகுந்த நன்மையில் கொடுக்கும்.

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பகையாக மாறலாம். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும் என்றாலும் புதிய முதலீடுகளை இன்றைய தினம் தவிர்க்க வேண்டும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எதிர்பாராத வேலை சுமை உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் வந்து நீங்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனிக் கவனம் செலுத்துவது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சாய் பாபாவை வணங்கி கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

 

Previous articleமீனம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனக்குழப்பம் விலகும் நாள்!!
Next articleரிஷபம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கணவன் மனைவி இடையே அன்யூனியம் கூடும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here