மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் பொறுமையும் மாலையில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்!!
மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் பொறுமையும் மாலையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியையே ஒற்றுமை குறையும் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது.
வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும். மாலைக்கு பின் சிறிதளவு வந்து சேரும். உத்தியோகத்தில் வேலை பளு கூடும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக வீண் அலைச்சல் வந்து சேரலாம். அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதி காப்பது நல்லது. கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.
உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மன குழப்பம் உண்டாகலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.
மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது. வெளிநாட்டில் இருக்கும் அன்பர்கள் ஒவ்வொரு யோசனைகளிலும் முன் சிந்தனையுடன் இருப்பது நல்லது.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சரபேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.