அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சிபிஐ!

0
139

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல் பட்டியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், அவர் திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.

விடுதியில் தங்கிப் படித்து வந்த அவரை ஆசிரியர்கள் கழிவறைகள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்ய சொன்னதாகவும், மேலும் மதமாற்றம் செய்வதற்கு கட்டாயப்படுத்தியதாகவும், சொல்லப்பட்டது.

இதனால் பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வந்தார்கள்.

மேலும் காவல்துறை விசாரணை செய்ததில் இந்த பள்ளியில் எந்தவிதமான மதமாற்ற முயற்சியும் நடைபெறவில்லை என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஆனாலும் காவல்துறையினரின் விசாரணையின் மீது தனக்கு நம்பிக்கையில்லை என்று தெரிவித்து அந்த மாணவி லாவண்யாவின் தந்தை முருகானந்தம் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று தெரிவித்து மனு தாக்கல் செய்தார்.

மேலும் இது தொடர்பாக தமிழக பாஜக இந்த குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டங்களை நடத்தியது. இதுகுறித்த வழக்கை விசாரணை செய்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. அதோடு சிபிஐக்கு இந்த வழக்கை மாற்றியது உச்ச நீதிமன்றமும் உறுதி செய்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், மாணவி தற்கொலை வழக்கு குறித்து விடுதியின் காப்பாளர் சகாயமேரி மீது சிபிஐ 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இந்திய தண்டனை சட்டப்பிரிவு 305, குழந்தைகளை தற்கொலை செய்ய தூண்டுதல், 511 குற்றம் செய்ய முயற்சி செய்தல் மற்றும் சிறுவர்கள் நீதி சட்டப்பிரிவுகள் ஆன 75,82(1), உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சென்னை சிபிஐ டிஎஸ்பி ரவி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அவர்தான் இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது சிபிஐ டிஎஸ்பி ரவி தலைமையில் விசாரணை ஆரம்பமாகிறது.

இந்த சூழ்நிலையில், திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த விடுதியின் காப்பாளர் சகாயமேரி பினையில் வெளியே வந்தார் அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

Previous articleகோலியைப் பற்றி கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்களிடம் சீரிய ரோகித் சர்மா!
Next articleஇன்று முதல் கல்லூரிகள் திறப்பு!