சவுதி அரேபியாவின் இராணுவத்தளபதி பஹத் பின் அப்துல்லா முகமது அல் முதாயரை இந்திய ராணுவ தளபதி நரவனே நேற்று தொலைபேசியின் வழியாக தொடர்பு கொண்டு உரையாற்றினார்.
அப்போது இருதரப்பு ராணுவ உறவை வலுப்படுத்தவும், ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் கூடிய அம்சங்களை அவர்கள் இருவரும் ஆராய்ந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இதனை இந்திய ராணுவம் தன்னுடைய வலைப்பதிவில் தெரிவித்திருக்கிறது.
இந்தியாவிற்க்கும், சவுதி அரேபியாவுக்குமிடையே இராணுவ உறவு கடந்த சில வருடங்களாக வலுவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இராணுவத்தளபதி கடந்த 2020 ஆம் வருடம் டிசம்பர் மாதம் சவுதி அரேபியா சென்று வந்தது நினைவுகூரத்தக்கது
.
சமீபகாலமாக ராணுவ அளவில் நாட்டை பலப்படுத்தி வரும் மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிக அளவிலான ராணுவ தளவாடங்கள் வாங்குவது, போர்க்கப்பல்களை வாங்குவது, போர் விமானங்கள் வாங்குவது, உள்ளிட்ட வேலைகளில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது.
இதனால் பல தீவிரவாத அமைப்புகளும், பாகிஸ்தான் உள்ளிட்ட நம்முடைய அண்டை நாடுகளும் சற்றே நடுநடுங்கி போயிருக்கிறார்கள். இந்த நிலையில் சவுதி அரேபியாவிற்கும், இந்தியாவிற்கும், உள்ள ராணுவ உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக இராணுவத் தளபதிகளின் பேச்சுவார்த்தை அவர்களிடையே கிலியை ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.