ராணுவ ஹெலிகாப்ட்டர் விழுந்து கோர விபத்து! உடல் முழுவதும் எரிந்து உயிரிழந்த உயரதிகாரிகள்! 3 பேர் மீட்பு!
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சி மேற்கொள்ள வேண்டி சென்றுள்ளது. சூலூர் விமான தளத்தில் இருந்து வெலிங்டனுக்கு சென்றது என்றும், அப்போது பனிமூட்டம் காரணமாக அது எங்காவது மோதி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
அந்த விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் முழுவதும் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் 14 பேர் பயணம் செய்ததாகவும் தகவல்கள் தெரிவித்து உள்ளனர். அதுவும் அதை நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார். அதில் தற்போது படுகாயங்களுடன் 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்தில இருந்து 4 பேரின் உடல் முழுவதும் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் யார் என்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அந்த இடத்தில் மீட்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அந்த விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் ராணுவ உயர் அதிகாரிகள் பலர் இருந்ததாகவும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. மேலும் கீழே விழுந்து நொறுங்கிய அதில் பயணம் செய்த ராணுவ உயர் அதிகாரிகளின் நிலை என்ன என்று தற்போது வரை தெரியவில்லை.
மேலும் யார்? யார்? அதில் பயணித்தார்கள் என்பது குறித்த செய்தியும் இன்னும் கிடைக்கவில்லை. மேலும் அதில் முப்படை இராணுவ தளபதியான பிபின் ராவத் உட்பட பல முக்கிய அதிகாரிகள் பயணம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.