அமரன் படத்தில்  நடித்த சிவகார்த்திகேயன்!! ராணுவ அதிகாரிகள் செய்த செயல்!!

Photo of author

By Sakthi

Sivakarthikeyan: அமரன் படத்தில் மேஜர் முகுந்தன் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிவகார்த்திகேயனை கௌரவித்த ராணுவ அதிகாரிகள் மையம்.

இயக்குநர் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து இருந்த  படம் தான் அமரன். இந்திய ராணுவ வீரர் “மேஜர் முகுந்த் வரதராஜன் பையோ கிராபி”யை   மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும் . இந்த படம் அக்டோபர் 31-ம் தேதி  தீபாவளி தினத்தன்று வெளியானது. இப்படத்தில்  கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்து இருந்தார்.

கதாநாயகியாக  சாய் பல்லவி  நடித்து இருந்தார்.இது வரை வெளியான சிவகார்த்திகேயன் திரைப் படங்களில் அதிக வசூல் செய்த படமாக இது உள்ளது. இந்த படம் உலக அளவில் 300 கோடி வசூல் செய்து உள்ளது. அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தை கண் முன்னே கொண்டு வந்து இருப்பார்.

சிவகார்த்திகேயன் நடிப்பு அனைவராலும் பாராட்டு பெற்ற ஒன்றாக இருந்தது. அந்த வகையில் அமரன் படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்ததற்காக அவருக்கு விருது வழங்கி கௌரவப்படுத்தி இருக்கிறது ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம்.

சிவகார்த்திகேயன் படம் என்றால் கலகலப்பான காமெடி பானியில் இருக்கும் என்ற பிம்பத்தை உடைத்து  எறிந்துள்ளார்.  அமரன் படத்தின்டிரைலர் வெளியான போது  பலரும் இந்த படத்திற்கு அவர் செட் ஆக மாட்டார் என தெரிவித்து இருந்தார்கள் அதை பொய்யாகி இருக்கிறார் சிவக்கார்த்திக்கேயன்.