குன்னூர் அருகே விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்கள் கிரேன் மூலமாக அகற்றம்!

Photo of author

By Sakthi

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து வந்த ராணுவ ஹெலிகாப்டர் கடந்த 8ஆம் தேதி குன்னூர் அருகே இருக்கின்ற நஞ்சப்பசத்திரம் வனப்பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பலியானதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பான விசாரணையை விமானப்படையும், தமிழக காவல்துறையினரும், நடத்திவருகிறார்கள்.

ஹெலிகாப்ட்டரின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுக்கு விமானப்படையினர் எடுத்துச் சென்றிருக்கிறார்கள் ஹெலிகாப்டரின் தீப்பிடித்த பாகங்கள் வனப்பகுதியில் கிடந்ததால் அந்த பகுதி முழுவதும் ராணுவம் மற்றும் காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கடந்த நான்கு தினங்களாக சிறிய பாகங்கள் வெட்டி எடுக்கப்பட்டு மூட்டைகளாக கட்டி இரண்டு லாரிகளில் சூலூர் விமான தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது.

எடை அதிகமாக கொண்ட எஞ்சின் மற்றும் வால் பகுதியை கொண்டு செல்வதற்கு முடியாமல் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக, 24ஆம் தேதி விபத்து நடைபெற்ற பகுதியை ஹெலிகாப்ட்டரிலிருந்து அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள். எடை அதிகமாக இருக்கின்ற ராட்சத பாகங்களை எவ்வாறு எடுத்துச் செல்வது என்று ஆலோசனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் பாகங்கள் கிரேன் மூலமாக எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது என்று அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள்.