உள்துறை அமைச்சரை வரவேற்பதற்காக அரசு சார்பிலும் பாஜக சார்பிலும் பிரம்மாண்ட ஏற்பாடு தயார்! விழாக்கோலம் பூண்ட தமிழகம்!

Photo of author

By Sakthi

இன்று மதியம் சரியாக ஒன்று முப்பது மணி அளவில் சென்னை விமான நிலையம் வரவிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள். விமான நிலையத்தில் இருந்து அவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கின்ற லீலா பேலஸ் வரவேற்பு அளிக்க இருக்கிறார்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நெறிமுறைகளுக்கு உட்பட்டு இந்த வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பல்வேறு கலைநிகழ்ச்சிகள் தமிழக பாஜக நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. அந்த கட்சியின் தொண்டர்கள் உடைய அவசர மருத்துவ சேவைக்காக பாஜக மருத்துவ அணி சார்பாக அவசர ஊர்தி, மற்றும் அவசரகால மருத்துவம் பார்ப்பதற்கு மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். பலர் தமிழக கிராமியக் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலைஞர்கள் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க இருக்கிறார்கள். மாலை ஆறு முப்பது மணி அளவில் நடக்க இருக்கின்ற பாஜகவின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க இருக்கின்றார் அந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட பதிவு செய்த பத்திரிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

உரிய பத்திரிக்கையாளர் அடையாள அட்டை, மற்றும் தனிநபர் அரசாங்க அடையாள அட்டையுடன் இருவரும் பத்திரிகையாளர்கள் காவல்துறையுடைய முறையான சோதனைகள் முடிந்த பின்பு 5:15 மணிக்குள்ளாக நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்து விட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கின்றது. இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் உள்துறை அமைச்சர் இரவு உணவில் கலந்துகொள்ள இருக்கின்றார் இவ்வாறு தமிழக பாரதிய ஜனதாவின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.