Breaking News

கிராம உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணை; அரசு சொன்ன ஹேப்பி நியூஸ்!!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் தமிழ்நாட்டில் காலியாக இருக்கக்கூடிய கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளனர். சுமார் 2299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக இருக்கக்கூடிய கிராம உதவியாளர் பணியிடங்களையும் நிரப்புவதற்கு அனுமதி அளிக்கும் விதமாக இந்த அரசாணை பார்க்கப்படுகின்றது.

மேலும் வருவாய் கிராமங்களில் விஏஓ எனப்படும் கிராம நிர்வாக உதவியாளர்களுக்கு நியமிக்கப்படுவது வழக்கம். இந்த பணியிடங்கள் கடந்த பல ஆண்டுகளாக நியமிக்கப்படாமல் காலியாக இருக்கின்றது. இதனால் கிராம நிர்வாக அலுவலர்களின் பணிநேரம் விரயம் ஆகின்றது.

உதவியாளர்களை விரைவில் நியமிக்க வேண்டும் எனவும் அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தற்போது அது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக இருக்கக்கூடிய கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது அரசு முடிவு செய்துள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் அந்த தாலுகாவில் வசிப்பராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் கிராமத்திற்குள் வசிப்பவராக இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.

அதனால் கிராம உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அவர்களுடைய ஊரிலேயே வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.