வன்முறையில் ஈடுபடுபவர்களை தே.பா சட்டத்தில் கைது செய்யுங்கள்: தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்

0
140

தமிழகத்தில் கறுப்பர் கூட்டம் என்ற ஒரு யுடியூப் சேனல் கந்தசஷ்டி கவசத்தை அவதூறாக பேசி தமிழகமே கொந்தளித்து இருகின்றன.இதனால் தமிழகத்தில் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள்,கண்டன முழக்கங்கள் என பிரச்சனைகள் ஒவ்ஒன்றாக வருகின்றன.இதற்கு தலைவராக இருந்த கறுப்பர் கூட்டம் நிர்வாகி சுரேந்திரன் புதுச்சேரி போலீசில் சரண் அடைந்தார். பின் அவரது கறுப்பர் கூட்டம் சேனல் அலுவலகம் சென்னையில் சோதனையிடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.இந்நிலையில் கலவரங்கள் தூங்குபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுங்கள் என மஜக பொதுச்செயலாளரும் ,நாகை மாவட்ட எம்.எல்.ஏயுமான தமிமுன் அன்சாரி வலியுறுத்தி உள்ளார்.அண்மைகாலமாக தமிழகத்தில் அமைதியை குழைக்க சிலர் சதி செய்து வருகின்றன.

உலக நாடுகளில் 200 கோடி பேரை அவமதிக்கும் வகையில் நபிகள் அவர்களை அவமதித்து வர்மா என்பவர் கேலி சித்திரம் வெளியிட்டார்.அது கடும் கொந்தளிப்பை உருவாக்கியது.
அது போன்று இப்போது இந்து மத மக்கள் கொண்டாடும் கடவுள் முருகனின்,கந்தசஷ்டி கவசம் பற்றி அவதூறாக பேசி மத சண்டை வர காரணமாக அமைகிறது.

கோவையில் பெரியார் சிலைக்கு சிலர் காவிச் சாயம் பூசி அவமதித்து கலவரம் உருவாக காரணமாக இருந்தன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அதறிப்பவர் மீதும் நடத்துபவர் மீதும் காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு தமிமுன் அன்சாரி அவர் கேட்டுக்கொண்டார்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Previous articleமதுபாட்டில்கள் உடைப்பு :கண்ணீர் விட்ட குடிமகன்கள்
Next articleபன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு தேர்வை மீண்டும் எழுத தேதி அறிவிப்பு?