நாளை முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.. கலெக்டர் கொடுத்த அலார்ட்!!

 

தமிழக அரசு பெண்களுக்கு தரும் மாதம் 1000 ரூபாயான மகளர் உரிமைத் தொகையை பெறுவதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று பரவும் தகவல் குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திமுக அரசு தமிழக பெண்களின் முன்னேற்றத்திற்காக அதாவது அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் வங்கிக் கணக்கில் மாதம் 1000 ரூபாய் வரவு வைக்கும் திட்டத்தை கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தது. இதையடுத்து மாதம் மாதம் தமிழகத்தில் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் 1000 ரூபாயை தமிழக அரசு செலுத்தி வருகின்றது.

கலைஞர். மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் இன்று வரை ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் குடும்பத் தலைவிகள் மாதம் 1000 ரூபாய் பெற்று பயன் பெற்று வருகின்றனர். மேலும் இந்த திட்டத்தில் மேல் முறையீடு செய்த பெண்களுக்கு அடுத்த மாதம் முதல் 1000 ரூபாய் வழங்கப்படவுள்ளது. அந்த வகையில் இந்த திட்டத்தில் பயன் பெறுபவர்களின் எண்ணிக்கை மேலும் 1 கோடியே 15 லட்சமாக அதிகரித்துள்ளது.

தேர்தல் முடிந்த பிறகு புதிதாக ஜூலை 15ம் தேதி முதல் மேலும் 1 லட்சத்து 48 ஆயிரம் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அடுத்து தமிழக அரசு மகளிர் உரிமைத் தலையில் புதிதாக விண்ணப்பித்த தொடர்பான அறிவிப்பை எப்பொழுது வெளியிடும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் நேரத்தில் மகளிர் உரிமை தொகைக்கு புதிதா விண்ணப்பிக்க ஆகஸ்ட் 17, 19, 20 ஆகிய தேதிகளில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என்று தகவல்கள் பரவி வந்தது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு புதியதாக விண்ணப்பிக்க முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. இதற்கு தமிழக அரசு ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை குறித்த எந்தவொரு அறிவிப்பு வெளியாகாத நிலையில் இது போன்று சமூக வலைதளங்களில் பரவும் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்று தமிழக அரசு கூறி இருந்தது. இந்நிலையில் இது குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளார்.

இது குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் “மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்காத பெண்கள் நாளை முதல் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் பரவும் தகவல் வதந்தி மட்டுமே. இது போன்று அரசு அறிவிப்புகள் குறித்த பொய்யான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம். பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.