CINEMA:2025 பொங்கலுக்கு அஜித்தின் குட் பேட் அக்லி படத்துடன் மோதும் அருண் விஜய்யின் வணங்கான் திரைப்படம்!!
தமிழக திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார். இவர் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் வருகின்ற 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு “குட் பேட் அக்லி” திரைக்கு வர இருக்கிறது என தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் “விடாமுயற்சி” அதே ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் “குட் பேட் அக்லி” படத்துடன் வணங்கான் திரைப்படம் வெளியாகும் என தகவல் வெளியானது. இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் அவர்கள் வணங்கான் படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இந்த வணங்கான் திரைப்படம் கடந்த தீபாவளி ரிலீஸ் ஆகவேண்டிய சூழல் இருந்தது.
இந்த நிலையில் சில காரணங்களால் அப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய் இருக்கிறது. இது குறித்து அருண் விஜய் சமீபத்தில் பதிவில் ஒன்று வெளியிட்டு இருந்தார். மேலும் அருண் விஜய் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவர். இவர் 2000 வது ஆண்டு காலகட்டத்தில் நடிக்கத் தொடங்கினார் இருப்பினும் அவருக்கு அவரது திரைப்படங்கள் பெயர் சொல்லும் அளவிற்கு வெற்றிப் படங்களாக அமையவில்லை.
இந்த நிலையில் தான் நடிகர் அஜித் குமாரின் என்னை அறிந்தால் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.