TVK: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற பரப்புரையில் ஏற்பட்ட 41 பேரின் இழப்புகள் நாட்டியே உலுக்கியுள்ளது. அந்த சம்பவம் நடந்து சுமார் 13 நாட்கள் ஆனா நிலையிலும் கூட அதன் சூடு இன்னும் தணியவில்லை என்றே கூறலாம். இந்த நிகழ்வு தொடர்பாக தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதற்கான விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், சிறப்பு புலனாய்வு குழுவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தவெக மனு அளித்துள்ளது. விசாரணை ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்க தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களிடம் வீடியோ கால் மூலம் பேசி வருகிறார்.
விஜய் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்ப்பதற்குள் அங்கு நிலைமை மாறி விடும் என்பதால், இந்த ஐடியாவை விஜய்க்கு கொடுத்தது, தவெக கொள்கை பரப்பு துணை செயலாளர் அருண்ராஜ் தான் என்றும், விஜய் வீடியோ காலில் பேசுவதற்கான ஏற்பாடுகளை கரூருக்கு நேரில் சென்று அவரே ஏற்பாடு செய்தார் என்றும் சொல்லப்படுகிறது. விஜய் கட்சி ஆரம்பிக்கும் போது உடனிருந்த யாரும் இப்போது அவருடன் இல்லை.
கரூர் சம்பத்திற்கு பிறகும் கூட, அருண்ராஜ் மட்டுமே உடனிருப்பதால் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை அருண்ராஜ்-க்கு ஒதுக்க, விஜய் முடிவெடுத்திருப்பதாக தவெக வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கனவே விஜய்யின் நம்பிக்கை குரிய ரசிகர் மன்ற தலைவர்கள் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்களை கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களாக்கலாம் என்று விஜய் முடிவு செய்திருப்பதாக தகவல் கசிந்தது. இந்நிலையில் புஸ்ஸி ஆனந்தின் பதவி பறிப்பு தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.